பூண்டு வியாபாரியுடன் தகாத உறவு.. முட்புதருக்குள் நிர்வாணமாக கிடந்த பெண் சடலம்..!! திடுக்கிட்ட சேலம்..
நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் அருகே வாய்க்கால் பட்டறையைச் சேர்ந்தவர் ராஜு என்பரின் மனைவி மலர் (43), நவம்பர் 25-ஆம் தேதி காலை, சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு செல்வதாக கூறி வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார். நீண்ட நேரமாகியும் மலர் வீடு திரும்பாததால் ராஜு தன் மனைவியை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார். ஆனால், அவரின் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்துள்ளது.
அவரின் குடும்பத்தினர் சேலம் தனியார் மருத்துவமனையில் விசாரித்துள்ளனர். மலர் மருத்துவமனைக்கு வரவில்லை என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், நவம்பர் 27ஆம் தேதி சேலம் மாநகர துணைக் காவல் ஆணையர் வேல்முருகனிடம் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறை, விசாரணை மேற்கொண்டனர். மலரிடம் கடைசியாக பேசியது கன்னங்குறிச்சி தாமரை நகரைச் சேர்ந்த பூண்டு வியாபாரி கனகராஜ் என்பது தெரியவந்துள்ளது. மேலும், இவர் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு காவல் நிலைய ரவுடிகள் பட்டியலில் இருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து, கனகராஜை பிடித்து காவல்துறையினர் விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது.
இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், “கனகராஜ் பூண்டு வியாபாரம் செய்வதற்காக மலர் ஊருக்கு சென்றுள்ளார். அங்கு இருவருக்குமிடையில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் கடந்த பத்து நாட்களாக தொலைப்பேசியில் பேசி வந்துள்ளனர். இந்நிலையில் தான், நவம்பர் 25-ஆம் தேதி, கோரிமேடு பகுதிக்கு காலை 10 மணிக்கு கனகராஜைப் பார்க்க மலர் வந்துள்ளார்.
பின்னர் அந்த பெண்ணை தனியாக காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அதே சமயம் தன்னுடைய ரவுடி கூட்டாளியான கன்னங்குறிச்சி தாமரை நகரைச் சேர்ந்த சக்திவேல் என்பவரை அங்கு வரவைத்துள்ளார். இருவரும் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மலர் அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்துள்ளார். ஆத்திரமடைந்த கனகராஜ் தலையில் அடித்து மயக்க மடைய வைத்துள்ளனர்.
பின்னர் சக்திவேலும், கனகராஜூம் வலுக்கட்டாயமாக மாறி மாறி மலரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின், இருவரும் சேர்ந்து மயக்க நிலையில் இருந்த மலரின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர். அதனைத்தொடர்ந்து அவரின் உடலை முட்புதரில் நிர்வாண நிலையில் தள்ளிவிட்டு சென்றுள்ளனர்,” என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சடலத்தை கைப்பற்றிய போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட சக்திவேல், கனகராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.