For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அடேங்கப்பா லிஸ்ட் ரொம்ப பெருசா போகுதே!! தவெக மாநாடு.. 33 நிபந்தனைகளை விதித்த காவல்துறை..!!

The police department has given conditional permission for the Tamil Nadu Victory Association's first convention. Let's see what those conditions are...
07:33 PM Sep 08, 2024 IST | Mari Thangam
அடேங்கப்பா லிஸ்ட் ரொம்ப பெருசா போகுதே   தவெக மாநாடு   33 நிபந்தனைகளை விதித்த காவல்துறை
Advertisement

நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம், வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை இலக்காக கொண்டு பணியாற்றி வருகிறது. கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து கட்சியின் தலைவர் விஜய், மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் நிர்வாகிகளிடம் தொடர்ந்து ஆலோசனை நடத்தியதை தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் வருகிற 23-ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Advertisement

இதற்கான அனுமதி வேண்டி, கடந்த 28-ம் தேதி விழுப்புரம் மாவட்ட காவல்துறையிடம் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டது. அன்று மாலையே கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமால் தலைமையில் காவல் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் மாநாடு நடைபெற உள்ள இடத்தை ஆய்வு செய்தனர்.

விழுப்புரம் டிஎஸ்பி சுரேஷ் தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு இம்மாநாடு தொடர்பாக கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், 21 கேள்விகள் கேட்கப்பட்டு, அதற்கு பதில் அளிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. அனைத்து கேள்விகளுக்கும் விஜய் கட்சி தரப்பில் இரந்து பதில் அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நிபந்தனைகளுடன் மாநாடு நடத்த தமிழக காவல்துறையான அனுமதி வழங்கியுள்ளது.

தவெக மாநில மாநாட்டிற்கு 33 நிபந்தனை :

  1. தமிழக வெற்றிக் கழக மாநாட்டின் மேடை, மாநாட்டு இடம், பார்க்கிங் வசதி ஆகியவைகளின் வரைபடங்களை கொடுக்க வேண்டும்.

2) அனுமதி கேட்டு கொடுத்த மனுவில் 1.50 லட்சம் பேர் வருவார்கள் என குறிப்பிட்டுவிட்டு தற்போது கேட்கப்பட்ட 21 கேள்விகளில் 50 ஆயிரம் பேர் வருவார்கள் என்று பதில் சொல்லி இருக்குறீர்கள். இதற்கு என்ன காரணம்? 50 ஆயிரம் பேர் அளவுக்குதான் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்படும். ஆகவே அதற்கான ஏற்பாடுகளை செய்யவும்.

3) மாநாட்டிற்கு 50 ஆயிரம் பேர் வருவார்கள் என்று கூறியுள்ளீர்கள். ஆனால், நீங்கள் கொடுக்கப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கையில் பார்த்தால், 20 ஆயிரம் பேர்தான் வர முடியும். ஏன் இப்படி கொடுத்துள்ளீர்கள்?

4) மாநாடு இரண்டு மணிக்கு நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ள நிலையில், மாநாட்டிற்கு வருபவர்களை 1:30 மணிக்குள்ளேயே மாநாட்டு பந்தலுக்கு உள்ளே வந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளி மாவட்ட மற்றும் மாநிலங்களில் யார் தலைமையில் எந்தெந்த ஊரிலிருந்து எவ்வளவு பேர் வருகிறார்கள் என்ற விவரங்களை கொடுக்க வேண்டும்.

5) மாநாட்டிற்குச் செல்லும் வழிகள் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். ஆகவே அங்கு சமமான சாலையை அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

6) அனைவருக்கும் குடிநீர், உணவு ஏற்பாடு செய்ய வேண்டும்.

7) மாநாட்டு பரப்பளவு 85 ஏக்கர் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். மாநாட்டு மேடை, மற்றும் மாநாட்டிற்கு வருபவர்கள் அமரும் இடம் தவிர மற்ற இடங்களை பார்க்கிங் வசதிக்கு பயன்படுத்த வேண்டும்.

8) பார்க்கிங் இடத்திற்கும், மேடை மாநாட்டு இடத்திற்கும் இடையே தடுப்பு அமைக்க வேண்டும்.

9) கர்ப்பிணிகள், முதியோர்களுக்கு தனி இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

10) விஜய் வந்து செல்லக்கூடிய அந்த வழியில் இருபுறமும் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்.

11) மாநாட்டிற்கு வருபவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.

12) மாநாடு நடைபெறும் இடம் அருகே ரயில், ரோடு மற்றும் 6 கிணறுகள் உள்ளதால் அந்த பகுதியில் மக்கள் செல்லாதவாறு தடுப்புகளை ஏற்படுத்த வேண்டும்

13) தேசிய நெடுஞ்சாலை ஒட்டிய பகுதியில் நடைபெறுவதால் அவசரத்தில் பலர் இந்த சாலையை கடந்து செல்வார்கள். ஆகவே போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் மாநாடு நடத்த வேண்டும்.

14) பார்க்கிங் இடத்திலிருந்து மக்கள் மாநாட்டு இடத்திற்கு வருகையில் பாதுகாப்பிற்கு, தன்னார்வலரை பயன்படுத்தவும்.

15) கொடி, அலங்கார வளைவு, பேனர் போன்றவை கட்டுவதால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. முடிந்த அளவிற்கு அதனை தவிர்க்க வேண்டும்.

16) மழை வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதால் மாநாடு இடத்தில் முன்னேற்றப்பாட்டிற்கு நடவடிக்கைகளை எடுக்க தயாராக இருக்க வேண்டும்.

17) பொதுப்பணித் துறை பொறியாளரிடம் மேடையின் உறுதித்தன்மையை பெற வேண்டும்.

18) மின் பொறியாளர்களிடம் பாதுகாப்புச் சான்றிதழ் பெற வேண்டும்,

19) கூம்பு ஒலிபெருக்கி, வானவேடிக்கை கூடாது.

20) மாநாட்டிற்கு வரும் முக்கிய பிரமுகர்கள் மற்றும் விஜய்யுடன் வருபவர்களுக்கு யார் யாருக்கு பாஸ் வழங்கப்படுகிறது? அந்த விவரங்களை காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.

21) மக்கள் கூட்டம் வருவதால் ஆங்காங்கே அவர்கள் எளிதில் காணும் வகையில் எல்இடி அமைக்க வேண்டும்.

22) மாநாட்டு மேடை வரும் வழி மாநாட்டு திடல் அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்கவும் வேண்டும்.

23) மாநாட்டில் தீயணைப்பு, மருத்துவம் உள்ளிட்ட வாகனங்கள் அங்கு அனுமதி பெற்று நிறுத்தப்பட வேண்டும்.

24) தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் மாநாட்டில் இருந்து வருபவர்கள் தேசிய நெடுஞ்சாலைக்கு வராத வகையில் தடுப்புகளை அமைக்க வேண்டும்

ஆகியவை உட்பட, 33 நிபந்தனைகளை வழங்கி மாநாட்டிற்கு அனுமதி கொடுத்துள்ளது காவல்துறை.

Read more ; TN Rains | இன்று இரவு இந்த மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்க போகுது..!! – வானிலை ஆய்வு மையம் அலர்ட்

Tags :
Advertisement