'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை செயல்படுத்துவதில் இத்தனை சிக்கலா? எதிர்கட்சிகள் எதிர்ப்பது ஏன்?
முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு, நாடு முழுவதும் ஒரே தேர்தல் நடத்துவது சாத்தியம் எனக்கூறி 18, 626 பக்கங்கள் கொண்ட தனது பரிந்துரைகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் சமர்ப்பித்தார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்திற்கு திமுக, காங்கிரஸ் உட்பட இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்றால் என்ன?
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது மாநிலங்களுக்கும் மக்களவைக்கும் முன்பு போல் வெவ்வேறு நேரங்களில் தேர்தல் நடத்துவதற்குப் பதிலாக, நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது ஆகும். இதனால் தேர்தல் செலவு குறைவதோடு, தேர்தல்களால் மக்கள் நலத்திட்டங்கள் தாமதமாவதும் நீங்கும் என கூறப்படுகிறது.
இதில் உள்ள சிக்கல்கள் என்ன?
அரசியலமைப்பு திருத்தங்கள் : ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்த வேண்டும் என்றால், சில மாநில சட்டசபைகளின் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும். மேலும் சில மாநிலங்களில் சட்டமன்றங்களின் பதவிக்காலம் குறைக்கப்பட வேண்டும். மக்களவை தேர்தல் நடந்தாலும், அந்த நிபந்தனைகளுக்கு ஏற்ப தேர்தல் நடத்த, சுமார் 6 அரசியலமைப்பு திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். இங்கு தான் சிக்கல் ஆரம்பமாகிரது.
பொதுவாக அரசியல் சாசனத்தில் ஒரு சில திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்றால், அதனை பாதிக்கு மேல் உள்ள மாநில சட்டமன்றங்களும் நிறைவேற்ற வேண்டும். அப்படித்தான் பல சட்ட திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. ஆனால் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' விவகாரத்தில் மாநில சட்டமன்றங்களில் ஒப்புதல் தேவையில்லை எனக் கூறப்பட்டுள்ளது.
மாநிலங்களின் ஒப்புதல் : மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பது தான் திமுகவின் நிலைப்பாடு. இதேதான் பெரும்பான்மையான மாநில கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அதாவது மாநிலத்தில் செயல்படுத்தக்கூடிய எந்த ஒருமுடிவையும், மாநில அரசின் அனுமதியுடன் தான் செயப்படுத்த வேண்டும் என்பதுதான் மாநில கட்சிகளின் நிலைப்பாடாக இருக்கிறது.
தேர்தல் எப்படி நடைபெறும் : ஒரே நாடு ஒரே தேர்தல் முதற்கட்டமாக நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கும், 2ம் கட்டமாக பஞ்சாயத்து உள்ளிட்ட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. அனைத்து தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டால், தேசிய அளவில் வாக்காளர் பட்டியல் ஒரே மாதிரியாக இருக்கும். இதற்கு தேவையான அரசியலமைப்பு திருத்தங்களும் செய்யப்பட வேண்டும். ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட சட்டமன்றங்களைக் கொண்ட யூனியன் பிரதேசங்களில் தேர்தலை நடத்துவதற்கும் அரசியலமைப்பு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஒரே நாடு ஒரே தேர்தலை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது ஏன்?
'ஒரே நாடு ஒரே தேர்தல்' சட்ட திருத்தம் நிறைவேற்றிய அமலுக்கு வந்தால் என்ற எந்த மாதிரியான மாற்றம் ஏற்படும் என்ற கேள்வியும் எழுகிறது. இந்த சட்ட திருத்தம் நிறைவேற்றிய பிறகு, ஒரு தேதியை அறிவிக்க வேண்டும். அந்த தேதியிலிருந்து அதுக்கு அடுத்து நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல் வரைக்கும் தான் மாநில அரசின் ஆயுட்காலம் இருக்கும்.
உதாரணமாக தமிழகத்தை எடுத்துக்கொண்டால், அடுத்த சட்டமன்றத் தேர்தல் 2026 ஆம் ஆண்டு வருகிறது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' நிறைவேற்றி 2025 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பகிறது என வைத்துக்கொண்டால், 2006 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத்தில் தேர்தல் நடைபெற்று ஏதாவது ஒரு கட்சி ஆட்சி அமைக்கும் பட்சத்தில், அந்த ஆட்சியோட ஆயுட்காலம் வெறும் மூன்று ஆண்டுகள் தான் இருக்கும். அதாவது 2026 லிருந்து 2029 வரை தான் இருக்கும்.
2029 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும்போது, அனைத்து மாநிலங்களுக்கும் 2029 நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் நடைபெறும். எனவே 2025 இந்த சட்ட திருத்த மசோதா நிறைவேறும் பட்சத்தில் 2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலோட ஆயுட்காலம் வெறும் மூன்று ஆண்டுகள் தான் இருக்கும். தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை சந்திக்க நடக்கி இருக்கின்ற. இந்த ஐந்து மாநிலங்களுக்கு இது பெரும் பின்னடைவாக இருக்கும்.