பாதைக்கு வந்த பஞ்சாயத்து..!! தம்பி மனைவியை பதம் பார்த்த அண்ணன்..!! உதட்டில் ரத்தம் சொட்ட சொட்ட..!! சிவகங்கையில் பரிதாபம்..!!
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே வடக்கு சாலை கிராமத்தில் வசித்து வருபவர் லட்சுமணன். இவரது மனைவி தங்கம். லட்சுமணனுடன் பிறந்தவர் ராமர். இவர்கள் இருவருமே அருகருகே வசித்து வருகின்றனர். வெகு நாட்களாக இருவருக்கும் வீட்டின் அருகே செல்லும் பாதை தொடர்பாக பிரச்சனை இருந்து வந்துள்ளது.
அடிக்கடி சிறு சிறு சண்டைகள் வந்து காவல் நிலையத்திற்கு சென்று வந்துள்ளனர். இந்நிலையில், 3 நாட்களுக்கு முன்பு இந்த பாதையை ராமர் அடைத்து விட்டாதாக கூறப்படுகிறது. இதனால், இரு குடும்பத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, தகராறாக மாறியுள்ளது. இதில் ராமர் தனது தம்பி மனைவியான தங்கத்தின் உதட்டையும், வாயையும் சேர்த்து கோபத்தில் கடித்து குதறிவிட்டார்.
அதிகமாக இரத்தம் வெளியேறியதால், அங்கிருந்தவர்கள் உடனே அவரை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த 3 நாட்களாக சிகிச்சை பெற்று வரும் நிலையில், இது தொடர்பாக பாதிக்கப்பட்ட தங்கம் சாலைகிராமம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், இந்த விவகாரத்தில் போலீசார் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், இதுகுறித்து கூறுகையில் புகார் கொடுத்து மூன்று நாட்களாக ஆகிவிட்டது. எனது மகள் காவல் நிலையத்திற்கு மூன்று நாட்களாக செல்கிறார். இன்றைக்கு வா நாளைக்கு வா என்று கூறி தொடர்ந்து அலைய விடுகிறார்கள் என்று குற்றம்சாட்டினார்.