முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

எடப்பாடியிடம் போட்டுக் கொடுத்த எதிர் அணி..!! வெளிச்சத்திற்கு வந்த ரகசியம்..!! தளவாய் சுந்தரத்தின் பதவி பறிப்புக்கு காரணம் இதுதான்..!!

General Secretary Edappadi Palaniswami has removed Talavai Sundaram, who was in charge of AIADMK organizational secretary and Kanyakumari district secretary, and is currently the talk of the town.
10:12 AM Oct 09, 2024 IST | Chella
Advertisement

அதிமுக அமைப்புச் செயலாளர் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்த தளவாய் சுந்தரத்தை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீக்கியுள்ளது, தற்போது பேசுபொருளாகி உள்ளது.

Advertisement

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களில் அறியப்பட்ட முகங்களாக ஒரு சிலர் மட்டுமே இருக்கின்றனர். அந்த வகையில் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், நத்தம் விஸ்வநாதன், தளவாய் சுந்தரம், வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர், பொன்னையன் ஆகியோரை சொல்லலாம். ஜெ. மறைவுக்கு பின், சசிகலா ஆதரவு நிலைப்பாடு பிறகு எடப்பாடி பழனிசாமியுடன் இருந்தவர் தளவாய் சுந்தரம். த

2016 சட்டமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிமுகவுக்கு எம்எல்ஏக்கள் கிடைக்காத நிலையில், அந்த மாவட்டத்தைச் சேர்ந்த தளவாய் சுந்தரத்திற்கு தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி என்ற பொறுப்பு வழங்கப்பட்டது. மதுரையை தாண்டி எடப்பாடி பழனிசாமி எந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் அங்கு கட்டாயம் தளவாய் சுந்தரம் இடம்பெறுவார். அந்த அளவுக்கு நெருக்கமான தளவாய் சுந்தரத்தின் பதவியை எடப்பாடி பழனிசாமி பறிக்க ஆர்எஸ்எஸ் உருவத்தை கொடியேற்று கொடியசைத்து துவக்கி வைத்தது தான் காரணம் என்பது வெளிப்படையான விஷயம்.

ஆனால், உட்கட்சி பூசல் காரணமாக அவருக்கு எதிராக தொடர்ந்து பல புகார்கள் தலைமைக்கு பறக்க இறுதியாக அவரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. 2011இல் இருந்து அதிமுகவில் ஓரம் கட்டுப்பட்ட வரும் தளவாய் சுந்தரம், எடப்பாடி பழனிசாமியின் நெருக்கத்தை பயன்படுத்தி மீண்டும் கட்சிக்குள் வந்தார். இவர், தனது பகுதிக்கு உட்பட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளுடன் நெருக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

நடந்து முடிந்த ஆர்எஸ்எஸ் ஊர்வலம் மட்டுமின்றி, ஏற்கனவே பல நிகழ்வுகளில் அவர் கலந்து கொண்டிருக்கிறார். மேலும், கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றதாகவும், ஆனால் கட்சித் தலைமைக்கு எதுவும் தகவல் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. அப்போது அதனை கண்டும் காணாமல் தலைமை இருந்துள்ளது. தற்போது கன்னியாகுமரியில் தளவாய் சுந்தரம், முன்னாள் அமைச்சர் ஆன பச்சைமால் - அசோகன் ஆகியோர் தலைமையில் இரு கோஷ்டிகளாக அதிமுக செயல்பட்டு வருகிறது.

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தில் பங்கேற்றதை தொடர்ந்து தளவாய் சுந்தரம் குறித்து எதிர் அணியினர் சமூக வலைதளங்களில் பரப்பி விட்டுள்ளனர். இந்த தகவல் தலைமைக்கும் சென்றுள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலை தளவாய் சுந்தரத்தின் பரிந்துரையை ஏற்று பசலியான் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டார். ஆனால், அந்த தேர்தலில் அதிமுக நான்காம் இடத்திற்குச் சென்றது. இதற்கும் தளவாய் சுந்தரம் தான் காரணம் என எதிர் அணியினர் போட்டுக் கொடுத்துள்ளனர். பாஜகவுடன் கூட்டணி இல்லை என கூறிய நிலையில், தற்போது ஆர்எஸ்எஸ் உடன் நெருக்கம் காட்டியதே தளவாய் சுந்தரத்தின் பதவி பறிப்புக்கு காரண என கூறப்பட்டு வருகிறது.

Read More : கள்ளக்காதலி குடும்பத்திற்கு பணத்தை வாரி கொடுத்த கள்ளக்காதலன்..!! கூலித்தொழிலாளி கொலை வழக்கில் பயங்கர ட்விஸ்ட்..!!

Tags :
அதிமுகஎடப்பாடி பழனிசாமிதளவாய் சுந்தரம்
Advertisement
Next Article