முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பாரிஸ் ஒலிம்பிக் போட்டி : இந்திய அணியின் தலைவராக ககன் நரங் தேர்வு!

The opening ceremony of the Olympic Games will be held on the 16th in Paris, the capital of France. Shooter Gagan Narang has been selected as the captain of the Indian team.
07:23 AM Jul 09, 2024 IST | Mari Thangam
Advertisement

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகளின் துவக்க விழா வரும் 16ம் தேதி நடைபெறுகிறது. இதில் இந்திய அணிக்கு தலைவராக துப்பாக்கிச்சுடும் வீரர் ககன் நரங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒலிம்பிக் அணி தலைவராக மேரி கோம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ககன் நரங் பெயர் அறிவித்துள்ளனர். இவர் 2012 ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் ஆண்கள் 10 மீ ஏர் ரைபிள் வெண்கலப் பதக்கம் வென்றார்.

Advertisement

தொடக்க விழா நிகழ்ச்சியின் போது டேபிள் டென்னிஸ் வீரர் சரத்கமலுடன் பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்துவும் இணைந்து இந்திய அணி சார்பில் தேசிய கொடியை ஏந்திச் செல்கின்றனர். இதனிடையே, பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வரும் 26-ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 11-ஆம் தேதிவரை ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. இதில், இந்தியாவில் இருந்து 28 தடகள வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

இதில், தமிழ்நாட்டில் இருந்து பிரவீன் சித்திரவேல், சந்தோஷ் தமிழரசன், ராஜேஷ் ரமேஷ், சுபா வெங்கடேசன், வித்யா ராம்ராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில், நீளம் தாண்டுதல் வீரரான ஆல்ட்ரின், தரவரிசை அடிப்படையில் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இதன் மூலம், ஒலிம்பிக் வரலாற்றிலேயே தடகளத்தில் ஆறு வீரர்கள் தமிழ்நாட்டில் இருந்து தேர்வாகி இருப்பது இதுவே முதல்முறை ஆகும்.

Tags :
Gagan Narangindian teamOlympic GamesParis
Advertisement
Next Article