முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

'பாலியல் உறவுக்கு மறுத்த மூதாட்டி..' பேனாவால் குத்தி கொலை செய்த போலீஸ் அதிகாரியின் மகன்!! நடந்தது என்ன?

Police have arrested an engineering graduate who stabbed an old woman to death with a pen in Virudhunagar.
12:00 PM Jun 16, 2024 IST | Mari Thangam
Advertisement

விருதுநகரில் மூதாட்டியை பேனாவால் குத்தி கொலை செய்த பொறியியல் பட்டதாரி இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளரின் மகன் என தெரியவந்துள்ளது.

Advertisement

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராமமூர்த்தி சாலை பகுதியைச் சேர்ந்தவர் வேலம்மாள் (71). இவரது கணவர் உயிரிழந்த நிலையில் இவர் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், வழக்கம்போல தாயை பார்ப்பதற்காக மூதாட்டியின் மகள் லதா கடந்த 11-ம் தேதி சென்றார். அப்போது, தாய் வேலம்மாள் கண்கள், கழுத்து உள்ளிட்ட 14 இடங்களில் பேனாவால் குத்தப்பட்ட நிலையில் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். மர்மமான முறையில் மூதாட்டி கொலை செய்யப்பட்டிருப்பது, அந்தப் பகுதி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

தொடர்ந்து மூதாட்டி கொலை செய்யப்பட்டது குறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், சம்பவத்தன்று வேலம்மாளின் வீட்டருகே, பிற்பகல் சுமார் 3 மணி அளவில் அடையாளம் தெரியாத நபர், முதுகில் பை அணிந்தபடி நின்று நோட்டமிட்டுள்ளார். இதைப்பார்த்த சுற்றத்தினர், சந்தேகத்தில் அந்த நபரை திட்டி, அங்கிருந்து செல்லும்படி கூறியுள்ளனர். சிறிது நேரத்தில் அந்த நபர் அங்கிருந்து சென்றுவிட்டதாக தெரிவித்தனர். எனவே, அந்த மர்ம நபர், மூதாட்டியை கொலைசெய்துவிட்டு தப்பியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர். 

இதையடுத்து, அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. பதிவுகளை ஆய்வு செய்து பார்த்ததில், குறிப்பிட்ட அந்த நபர், அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்த போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் யோக முருகனின் மகன் ஜீவராஜன் (வயது 24) என்பது தெரியவந்தது. பொறியியல் மாணவரான ஜீவராஜனின் போலீசார் நடத்திய விசாரணையில் மூதாட்டியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

மது போதையில் மூதாட்டியை பாலியல் துன்புறுத்தல் செய்தபோது மூதாட்டி கத்தியதால் பேனாக்களால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பியதாக குற்றவாளி காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து ஜீவராஜனை கைது செய்த கிழக்கு காவல் நிலைய போலீஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Read more ; டேய் எப்புட்றா!! “9 வருஷ இடைவெளியில் ஒரே இடத்தில் நிற்கும் பெண்” கூகுள் மேப்பில் சிக்கியது எப்படி..?

Tags :
#Crimearrestdeathsexual torturevirudhunagar
Advertisement
Next Article