முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்களின் எண்ணிக்கை 100-ஐ கடந்தது..!! இன்று மேலும் 49 பேர் சஸ்பெண்ட்..!!

01:28 PM Dec 19, 2023 IST | 1newsnationuser6
Advertisement

நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு குறித்து கேள்வி எழுப்பிய 30 எம்.பி.க்கள் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தயாநிதி மாறன், எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், தமிழச்சி தங்கபாண்டியன், சி.என்.அண்ணாதுரை, செல்வம் உள்ளிட்டோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். காங்கிரஸ் எம்பிக்கள் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, திருநாவுக்கரசர் உள்ளிட்ட 31 எம்.பி.க்கள் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். எம்பிக்களின் சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Advertisement

நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவம் தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி கடந்த வாரம் மக்களவையில் போராட்டம் நடத்தியதால் திமுக எம்பி கனிமொழி, மார்க்சிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசன் உள்ளிட்ட 13 எம்.பி.க்களும் மாநிலங்களவையில் டெரிக் ஓ பிரையனும் உள்ளிட்ட 14 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்நிலையில், இன்று மேலும் 49 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டை சேர்ந்த திருமாவளவன், கார்த்திக் சிதம்பரம், ஜெகத்ரட்சகன், தனுஷ் குமார் மற்றும் பரூக் அப்துல்லா, சுப்ரியா சுலே, சசி தரூர், மணீஷ் திவாரி உள்ளிட்டோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மக்களவையில் நடந்த தாக்குதலுக்கு விளக்கம் கேட்டு போராடி வரும் நிலையில், சஸ்பெண் செய்யப்பட்ட எம்பிக்களின் எண்ணிக்கை 100-ஐ கடந்துள்ளது.

Tags :
எம்பிக்கள்சஸ்பெண்ட்நாடாளுமன்றம்
Advertisement
Next Article