தமிழகமே... 2 ஆண்டுக்கு பின் 100-ஐ கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை...! 104 பேர் சிகிச்சை...!
தமிழகத்தில் 23 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு உறுதியாகியுள்ளது. இதில் சென்னையில் 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 41 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. உருமாறிய ஜேஎன் 1 வகை கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் நாட்டில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. முதல் முறையாக கடந்த 8ம் தேதி கேரளாவில் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளதை அடுத்து, அனைத்து மாநில சுகாதாரத்துறை நேற்று ஆலோசனை நடத்தியது.
தமிழகத்தில் 23 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு உறுதியாகியுள்ளது. இதில் சென்னையில் 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 41 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும் தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது 104 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 292 புதிய ஜேஎன் 1 வகை கொரோனா தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் தேசிய தலைநகரம் டெல்லியிலும் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின்படி, நாட்டில் புதிதாக 308 பேருக்கு உருமாறிய ஜேஎன் 1 வகை கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.