முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

விடுதியில் விடிய விடிய நடந்த ’நிர்வாண பார்ட்டி’..!! உடல் முழுவதும் ஸ்டிக்கர்..!! டாப் நட்சத்திரங்கள் பங்கேற்பு..!! பெரும் சர்ச்சை..!!

02:26 PM Dec 23, 2023 IST | 1newsnationuser6
Advertisement

ரஷ்யாவில் அதிபராக இருப்பவர் புதின். கடந்த 2000ஆம் ஆண்டு முதலே ரஷ்யாவைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர். அங்கே எதிர்க்கட்சிகளையும் தனக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களையும் காலி செய்வதை புதின் வாடிக்கையாகவே வைத்துள்ளார். இதற்கிடையே அவரது அரசுக்கு எதிராக இப்போது ரஷ்யாவில் குரல்கள் எழுந்துள்ளது. ரஷ்யாவின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் புதின் காக்கத் தவறிவிட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.

Advertisement

தலைநகர் மாஸ்கோவில் நடந்த நள்ளிரவு பார்ட்டி ஒன்று தான் இப்போது சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. விடிய விடிய நடந்த இந்த பார்டியில் கலந்து கொண்டவர்கள் அனைவருமே பிரபலங்கள். இரவு முழுக்க பார்ட்டி நடத்துவதால் என்ன பிரச்சனை என்று நீங்கள் கேட்கலாம். இந்த பார்ட்டியின் டிரஸ் கோட் தான் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதில் கலந்து கொண்ட அனைவருமே கிட்டத்தட்ட நிர்வாண உடையை அணிந்திருந்தனர்.

ஆடைகள் இல்லாமல் இவர்கள் நடத்திய பார்ட்டின் நாட்டின் விழுமியங்களுக்கு எதிராக இருப்பதாகப் பலரும் சாடியுள்ளனர். ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள பிரபல இரவு விடுதியான முட்டாபோரில் இந்த நிகழ்வு நடந்துள்ளது. இதில் ரஷ்யாவின் பிரபல டாப் நட்சத்திரங்களான பிலிப் கிர்கோரோவ், லொலிடா மற்றும் டிமா பிலன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். மேலும், 2018இல் ரஷ்ய அதிபர் தேர்தலில் போட்டியிட்ட டிவி தொகுப்பாளர் க்சேனியா சோப்சாக் என்பவரும் இந்த நிர்வாண பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார். இதை எல்லாம் விட ரஷ்ய அதிபர் புதினால் வளர்க்கப்படும் (goddaughter) க்சேனியா சோப்சாக் என்பவரும் இதில் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரத்தில் எதிர்ப்புகள் அதிகரித்த நிலையில், பார்ட்டியின் இரண்டாவது நாளன்று அந்நாட்டு போலீசார் அதிரடி ஆய்வை நடத்தினர். இரண்டாவது நாளும் பார்ட்டி நடந்தது என்றாலும் கூட அதில் ஆபாசமாக எதுவும் போலீசாருக்கு சிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

Tags :
நட்சத்திரங்கள்நிர்வாண பார்ட்டிபுதின்ரஷ்ய
Advertisement
Next Article