முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சவுக்கு சங்கருக்கு அடுத்தடுத்து திறக்கப்படும் கதவு..!! இந்த வழக்கிலும் ஜாமீன் கிடைத்தது..!!

The judge has granted conditional bail to Chawku Shankar in the case of defaming women constables and senior police officials.
06:36 PM Jul 26, 2024 IST | Chella
Advertisement

பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர், ரெட் ஃபிக்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், காவல்துறை உயரதிகாரிகள் குறித்து அவதூறாக பேசியதாகவும், மகளிர் போலீசார் குறித்தும் பாலியல் தொடர்பான கருத்துகளை தெரிவித்ததாகவும் கூறி கோவை சைபர் கிரைம் போலீஸ் அவரை தேனியில் வைத்து மே 14ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவின் பேரில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இருப்பினும், சவுக்கு சங்கருக்கு குண்டர் சட்டத்திலும், கரூர் பண மோசடி வழக்கிலும் ஜாமீன் கிடைத்துள்ளது. மற்ற வழக்குகளுக்காக அவர் இன்னும் சிறையில் உள்ளார்.

Advertisement

இந்நிலையில், பெண் காவலர்கள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகளை அவதூறாக பேசிய வழக்கின் விசாரணை கோவை 4-வது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் சவுக்கு சங்கர் தரப்பில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், மனுவை விசாரித்த நீதிபதி சரவணபாபு, சவுக்கு சங்கருக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

Read More : இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிப்பு..!! அமைச்சர் அதிர்ச்சி தகவல்..!!

Tags :
காவல்துறைசவுக்கு சங்கர்நிபந்தனை ஜாமீன்யூடியூபர்
Advertisement
Next Article