"எவன் கூட டி, இவ்ளோ நேரம் பேசுற"; கிச்சனில் இருந்த கரண்டியால், கணவன் செய்த காரியம்..
விருதுநகர் மாவட்டம், கோட்டையூர் மேற்கு காலனியை சேர்ந்தவர் பார்த்திபன். மினி வேன் மூலம் காய்கறிகளை விற்பனை செய்து வரும் இவர், அதே பகுதியைச் சேர்ந்த ராஜாத்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், வீட்டில் இருக்கும் ராஜாத்திக்கு அடிக்கடி செல்போன் அழைப்பு வந்துள்ளது. இதனால் அவர் அதிக நேரம் செல்போனில் பேசி வந்துள்ளார். இதனை கவனித் வந்த பார்த்திபனுக்கு, தனது மனைவியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், நேற்று அதிகாலை வழக்கம் போல் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த பார்த்திபன், கிச்சனில் இருந்த கரண்டியால், தனது மனைவி ராஜாத்தியின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ராஜாத்தியை மீட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு ராஜாத்தியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், இதுகுறித்து வழக்குபதிவு செய்து மனைவியை தாக்கிய பார்த்திபனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read more: அதிர்ச்சி!!! தனியாக நின்ற 14 வயது சிறுவன்; பைக்கில் அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர்..