FASTag New Rules | வாகன ஓட்டுநர்களே.. நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது FASTag புதிய விதிகள்.!!
டோல் கட்டணம் செலுத்த மற்றும் டோல் கேட்டுகளில் நெரிசலைக் குறைக்கும் விதமாக உருவாக்கப்பட்ட FASTag-க்கான புதிய விதிமுறைகள் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகின்றன. நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல் படி, குறிப்பாக FASTag-க்கான KYC சரிபார்ப்பை செய்திருக்க வேண்டும். இது ஆகஸ்ட் 1 முதல் கட்டாயமாகும். ஏற்கனவே பல விதிகள் இருந்தாலும், FASTag-க்கான புதிய KYC விதிமுறை கட்டாயமாக்கப்பட உள்ளது.
ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைக்கு வரும் புதிய ஃபாஸ்டேக் விதிகள்
- 5 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஃபாஸ்டேக்குகள் மாற்றப்பட வேண்டும்.
- 3 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட FASTags க்கு KYC புதுப்பிக்கப்பட வேண்டும்.
- வாகன விவரங்களை இணைத்தல்: வாகன பதிவு எண் மற்றும் சேசிஸ் எண் ஆகியவை FASTag உடன் இணைக்கப்பட வேண்டும்.
- புதிய வாகன பதிவு புதுப்பிப்பு: புதிய வாகனம் வாங்கிய 90 நாட்களுக்கு பதிவு எண்ணை புதுப்பிக்கவும்.
- FASTag வழங்குநர்கள் தங்கள் தரவுகளை சரிபார்க்க வேண்டும்.
- காரின் முன் மற்றும் பக்கவாட்டின் தெளிவான புகைப்படங்களை பதிவேற்றவும்.
- ஃபாஸ்டேக் மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட வேண்டும்.
FASTag-க்கான புதிய விதிமுறைகள் நாளை நடைமுறைக்கு வரவிருப்பதால், வாகன உரிமையாளர்கள் தங்கள் FASTag விவரங்களை புதுப்பிப்பதை உறுதிசெய்ய வேண்டும். KYC விவரங்களை சரிபார்த்தல், பழைய FASTag களை மாற்றுதல் மற்றும் வாகன விவரங்களை இணைத்தல் போன்ற நடவடிக்கைகளை அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். இதன் மூலம் டோல் கட்டணம் செலுத்தும் செயல்முறை மேம்பட்டு, போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read more ; நாட்டையே உலுக்கிய நிலச்சரிவு..!! முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்..?