நாடே எதிர்பார்ப்பு..!! ஒரே மேடையில் விவாதிக்கும் மோடி, ராகுல்..? இந்து ராம் எழுதிய கடிதத்தின் பின்னணி..!!
Modi-Rahul | 2024 மக்களவைத் தேர்தலை ஒட்டி, மோடியும் ராகுலும் ஒரே மேடையில் பங்கேற்று விவாதிக்க முன்வர வேண்டும் என மூத்த பத்திரிகையாளர்கள் கடிதம் எழுதி உள்ளனர். இந்த முன்முயற்சியில் முக்கியமானவராக இருப்பவர் இந்து ராம். அவர் ராகுல் மற்றும் மோடிக்குக் கடிதம் எழுதி அழைப்பு விடுத்துள்ளார். அதற்கு என்ன பதில் வந்தது என்பது பற்றி அவர் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து ராம் பேசுகையில், "எனக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் இருக்கிறார். அவர், “பொது மேடையில் விவாதிக்கத் தயாரா? என்று அடிக்கடி அரசியல் தலைவர்கள் தேர்தல் களத்தில் சவால் விடுகிறார்கள். ஆனால், அப்படி யாருமே விவாதத்திற்கு வருவதில்லை. எனவே, நாம் அதற்கு ஒரு முன்முயற்சியை எடுக்கலாம்” என்றார்.
அதனடிப்படையில் ஒரு கடிதத்தைத் தாயார் செய்தோம். அந்தக் கடிதத்தை ராகுல் காந்திக்கும் மோடிக்கும் அனுப்பி வைத்தோம். நாங்கள் அனுப்பிய கடிதம் மே 9ஆம் தேதி டெல்லிக்குச் சென்று அடைந்தது. அதற்கு அடுத்த நாளே ராகுல் ஒரு சிறப்பான பதிலை எங்களுக்கு எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில் ராகுல், ”இது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் கலந்தாலோசித்தேன். அவரும் இதற்குச் சம்மதித்துள்ளார். நானும் அதற்குத் தயார். அப்படி இல்லை எனில் கார்கேவும் கலந்துகொள்ளத் தயாராக உள்ளார்” என்று கூறியிருந்தார்.
ஆனால், பாஜக தேசிய தலைமையில் இருந்து ஒரு பதிலும் வரவில்லை. யாரும் இது குறித்து கருத்தும் கூறவில்லை. சமூக வலைத்தளங்களில் யார் யாரோ எழுதியுள்ளார்கள். ஆனால், அதிகாரப்பூர்வமான பதில் எங்களுக்குக் கிடைக்கவில்லை.
நாங்கள் என்ன நினைத்தோம் என்றால், இந்த விவாதத்திற்கு ராகுல்காந்தியும் மோடியும்தான் பொருத்தமானவர்கள் என முடிவு செய்திருந்தோம். ஏனென்றால், இவர்கள்தான் தேர்தல் களத்தில் காரசாரமாகக் கருத்துச் சொல்லி வருகிறார்கள். ஆகவே, இந்த இருவரும் விவாதத்திற்கு வந்தால் நல்லது என்று முடிவு செய்திருந்தோம்.
ராகுலும் மோடியும்தான் இன்றைய அரசியல் களத்தில் தனியாகத் தெரிகிறார்கள். எனவே, இவர்கள் இருவரும் விவாதித்தால் பொருத்தமாக இருக்கும். அதனால் இந்த அழைப்பை விடுத்தோம். நாட்டில் நிறைய தவறான செய்திகள் பரவுகின்றன. யார் என்ன சொல்கிறார்கள் என்ற உண்மை நிலவரம் தெரிவதில்லை. மதரீதியாகப் பல கருத்துகள் பரப்பப்படுகின்றன. இதற்கு எல்லாம் பதிலளிக்கக் கூடிய அளவுக்கு இரண்டு பேர் உள்ளதாக நாங்கள் நம்புகிறோம். அதனால் மோடியும் ராகுலும் இணைந்து ஒரே மேடையில் பேசினால் உண்மை மக்களுக்குப் புரியவரும் என நினைத்தோம். மற்றபடி எங்களுக்கு இதில் ஒரு நோக்கமும் இல்லை" என்றார்.
Read More : ’இது என்னடா புதுசா இருக்கு’..!! குர்குரே வாங்கி வர மறுத்த கணவன்..!! விவாகரத்து கோரிய மனைவி..!!