BREAKING: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் எய்ம்ஸ் மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி..!
முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 92 வயதான மன்மோகன் சிங் கடந்த காலங்களில் உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொண்ட நிலையில் இன்று அவசர மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது பாகிஸ்தானின் ஒரு பகுதியாக உள்ள கா, பஞ்சாப்பில் 1932 அன்று சீக்கிய குடும்பத்தில் மன்மோகன் சிங் பிறந்தார். பிரிவினைக்குப் பிறகு, அவரது குடும்பம் இந்தியாவில் குடிப்பெயர்ந்தனர். இவர் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் மத்திய ரிசர்வ் வங்கியின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
டாக்டர் மன்மோகன் சிங் 1991-96 ஆம் ஆண்டில் PV நரசிம்மராவ் தலைமையிலான அரசாங்கத்தில் நிதி அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் ஆட்சியில் இரண்டு முறை இந்தியாவின் பிரதமராக பதவி வகித்துள்ளார். மக்களவை மூலம் தேர்ந்தெடுக்கப்படாத ஒரே பிரதமர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
டாக்டர் மன்மோகன் சிங் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ராஜ்யசபாவில் இருந்து ஓய்வு பெற்றார். அப்போது தற்போதைய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, மன்மோகன் சிங்கின் பங்களிப்புகளை பாராட்டி, நவீன இந்தியாவின் பொருளாதார நிலப்பரப்பை வடிவமைப்பதில் அவரது முக்கிய பங்கை கோடிட்டுக் காட்டினார்.
Read more: பிரம்மபுத்திரா ஆற்றின் மீது உலகின் மிகப்பெரிய அணை கட்ட சீனா அனுமதி..!! இந்தியாவை பாதிக்குமா?