தன்னிடம் கடன் வாங்கிய இளம்பெண்ணை கட்டிலுக்கு அழைத்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி..!! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!!
சென்னை கிண்டியில் ஐடி நிறுவனம் நடத்தி வருபவர் சக்திவேல் (42). இவர், நாம் தமிழர் கட்சியில் தகவல் தொழில்நுட்ப பாசறையின் மாநில செயலாளராக உள்ளார். தனது நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இளம்பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்து பாலியல் தொல்லைக் கொடுத்ததாக புகாரளிக்கப்பட்ட நிலையில், அவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
இது குறித்த விசாரணையில், மேலும் 3 பெண்கள் சக்திவேல் மீது பாலியல் புகார் கொடுத்திருப்பது தெரியவந்தது. சென்னை கிழக்கு கடற்கரை சாலை உத்தண்டியை சேர்ந்த சக்திவேல். இவரது ஐடி நிறுவனத்தில் தாம்பரம், சேலையூரைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர் கடந்த 6 மாதங்களாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், தனது குடும்ப தேவைக்காக இளம்பெண், சக்திவேலிடம் ரூ.2 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.
இதன் மூலம் இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்ட நிலையில், இளம்பெண்ணை உல்லாசமாக இருக்க வரும்படி சக்திவேல் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதற்கு இளம்பெண் மறுத்த நிலையில், தான் கடனாக கொடுத்த ரூ.2 லட்சம் பணத்தையும் உடனடியாக திருப்பி தர வேண்டும் என மிரட்டியுள்ளார். இதனால், அந்தப் பெண் கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில், சக்திவேலிடம் விசாரணை நடத்தி நடைபெற்று வந்த நிலையில், அவரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அதே சமயம் சக்திவேல், தனது நிறுவனத்தில் பணிபுரியும் வேறு பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாரா என போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், அதே நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த மேலும் 3 இளம்பெண்கள் சக்திவேல் மீது புகாரளித்துள்ளனர். இதனால் சக்திவேலின் செல்போன், லேப்டாப் உள்ளிட்டவற்றை கைப்பற்றிய போலீசார் அவற்றை ஆய்வு செய்து வருகின்ற்னார்.