எந்தளவு ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறீர்களோ அந்தளவுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம்!. நிபுணர்கள் எச்சரிக்கை!
Smart Phone: எவ்வளவு நேரம் ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறீர்களா அவ்வளவு அதிகமாக மாரடைப்பு, இதய செயலிழப்பு மற்றும் பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.
ஆராய்ச்சியாளர்களின் கூற்றுபடி போன் நீண்டகாலமாக பயன்படுத்துவதால் உணர்ச்சி வசப்படுதல் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இவை ரத்த அழுத்தத்தை தூண்டுகிறது. உதாரணத்துக்கு சாப்பிடும் போது ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறோம். அவ்வாறு சாப்பிடும் போது மனதளவில் சாப்பிட முடிவதில்லை. பல சமயங்களில் போனிலேயே மூழ்கிவிடுகிறோம். இதனால் அதிகமாக சாப்பிடும் சூழ்நிலை உருவாகிறது. எடை அதிகரிப்பு பிரச்சினை, அதுமட்டுமின்றி ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதால் தூக்கம் பாதிக்கப்படுகிறது. இதனால் தூக்கமின்மை பிரச்சனை, ரத்த அழுத்தம், இதயம் தொடர்பான பிரச்சனை போன்றவை ஏற்படுகிறது.
மேலும் நீங்கள் ஒவ்வொரு முறை உங்கள் போனில் நோட்டிபிகேஷன்களை சரிபார்க்கும் போது உடலில் கார்டிசோலின் அளவு அதிகரிக்கிறது. கார்டிசோலின் அளவு அதிகரிப்பதால் மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். இந்தமாதிரியான பிரச்சனைகளை தவிர்க்க இரவில் தூங்குவதற்கு ஒருமணிநேரத்திற்கு முன்பு ஸ்மார்ட்போனை பயன்படுத்தக்கூடாது. கழிவறையில் கூட ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.