அதிக நேரம் கழிவறையில் இருப்பவரா நீங்கள்??? கட்டாயம் உங்களுக்கு இந்த பிரச்சனை வரும்..
தற்போது உள்ள காலகட்டத்தில், எப்போது கழிப்பறைக்கு சென்றாலும் கையில் செல்போனுடன் செல்லும் மனிதர்கள் பெருகி விட்டனர். இப்படி கையில் செல்போனுடன் கழிப்பறைக்கு செல்லும் பலர், 1 மணி நேரத்திற்கு குறைந்து வெளியே வருவதில்லை. படம் பார்ப்பதில் இருந்து, எப்படி சுவையான சமையல் செய்வது என்பதை கூட அங்கு உட்கார்ந்து தான் பார்க்கிறார்கள். இந்த பழக்கம் ஸ்மார்ட்போன் வந்ததில் இருந்து பலருக்கு வந்து விட்டது. அதிலும், இன்றைக்கு பலருடைய வீடுகளிலும் வெஸ்டர்ன் டாய்லெட் இருப்பதால், செளகர்யமாக சோபாவில் உட்காருவது போல் உட்கார்ந்து போனை பார்க்க ஆரம்பித்து விடுகிறோம். ஆனால் இந்தப் பழக்கம் என்னென்ன ஆபத்துகளை ஏற்படுத்தும் என்று உங்களுக்கு தெரியுமா???
இது குறித்து, டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் தென்மேற்கு மருத்துவ மையத்தில் உள்ள பெருங்குடல் அறுவை சிகிச்சை நிபுணர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, "என்னுடைய நோயாளிகள் பலரிடம் பேசியதில் அவர்கள் கழிப்பறையில் அதிக நேரம் செலவழிக்கிறார்கள் என்பது தெரிய வந்தது. கழிப்பறையில் வெகு நேரம் உட்கார்ந்திருந்தால், புவியீர்ப்பு விசையானது உடலின் கீழ்ப்பாதியை கீழே இழுப்பதால், அழுத்தம் அதிகரித்து அது உங்கள் ரத்த ஓட்டத்தை பாதித்து விடும். இதனால் செரிமானப் பிரச்சனை ஏற்படும். ஏற்கெனவே, செரிமானப் பிரச்னைகளுடன் போராடுபவர்களுக்கு இது இன்னும் பிரச்னையை அதிகரித்து விடும்.
இது மட்டும் இல்லாமல், ஆசனவாய் மற்றும் கீழ் மலக்குடலைச் சுற்றியுள்ள நரம்புகள் மற்றும் ரத்த நாளங்கள் வீங்கி விடும். இப்படி நரம்புகள் மற்றும் ரத்த நாளங்கள் வீங்குவதால், மூல நோய் ஏற்படும் அபாயமும் அதிகமாகும். மேலும், இப்படி அதிக நேரம் கழிப்பறையில் உட்காருவதால், இடுப்புத்தசைகளும் பலவீனமாகும்'' என்கிறார்.
Read more: “நான் திருமணமே செய்ய மாட்டேன்” நடிகையின் அறிவிப்பால், சோகத்தில் ரசிகர்கள்..