முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

புரட்டிப்போட்ட ’மிக்ஜாம்’ புயல்..!! 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!!

10:28 AM Dec 05, 2023 IST | 1newsnationuser6
Advertisement

சென்னையைப் புரட்டிப் போட்ட மிக்ஜாம் புயல், ஆந்திரா மாநிலத்தில் இன்று கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அங்கு 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

மிக்ஜாம் புயல் தாக்கம் காரணமாக சென்னை நிலை குலைந்துள்ளது. தற்போது மழை, வெள்ளம் வடியத் தொடங்கி வருகிறது. இந்நிலையில், இந்த புயல் ஆந்திராவை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் அம்மாநிலத்தில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இன்று காலை நிலவரப்படி, மிக்ஜாம் புயலானது ஆந்திர மாநிலம், நெல்லூருக்கு வடகிழக்கில் சுமார் 30 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு சுமார் 170 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது இன்று முற்பகல், தெற்கு ஆந்திர கடல் பகுதியில் பாபட்லா அருகே கரையைக் கடக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மிக்ஜாம் புயல் காரணமாக ஆந்திரா மாநிலத்தில் திருப்பதி, நெல்லூர், பிரகாசம், பாபட்லா, கிருஷ்ணா, மேற்கு கோதாவரி, கொணசீமா மற்றும் காக்கிநாடா ஆகிய 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று மதியம் புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு சுமார் 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புயல் இன்று கரையைக் கடந்தாலும் ஆந்திரா மாநிலத்தில் குறிப்பிட்ட நகரங்களில் வரும் வியாழக்கிழமை வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags :
8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்ஆந்திர மாநிலம்சென்னைதமிழ்நாடுமிக்ஜாம் புயல்
Advertisement
Next Article