2024 தேசிய விளையாட்டு நிர்வாக மசோதாவை வெளியிட்ட மத்திய அரசு...!
தேசிய விளையாட்டு நிர்வாக மசோதா 2024-ஐ இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
தேசிய விளையாட்டு ஆளுகை மசோதா 2024 வரைவு குறித்து விவாதிக்க மத்திய இளைஞர் நலன், விளையாட்டு, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா டெல்லியில் சம்பந்தப்பட்ட தரப்பினருடனான ஆலோசனைக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். இந்தியாவில் விளையாட்டுக்கான வலுவான ஆளுகைக் கட்டமைப்பை வடிவமைப்பதை நோக்கமாகக் கொண்ட வரைவு மசோதா குறித்த உள்ளீடுகளை சேகரிக்க, பல்வேறு தரப்பினருடன் நடத்தப்படும் தொடர்ச்சியான சந்திப்பு கூட்டங்களின் ஒரு பகுதியாக இந்த ஆலோசனை அமைந்துள்ளது.
சட்டத்திற்கு முந்தைய ஆலோசனை செயல்முறையின் ஒரு பகுதியாக, பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்களின் கருத்துகள் / ஆலோசனைகளை வரவேற்க, வரைவு தேசிய விளையாட்டு நிர்வாக மசோதா 2024-ஐ இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் பொது தளத்தில் வெளியிட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் பொதுமக்கள் அமைச்சகத்திற்கு ஆலோசனைகள் / கருத்துக்களை draft.sportsbill[at]gov[dot]in என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் 25.10.2024-க்குள் அனுப்ப வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.