For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அடுத்தடுத்து விமானங்கள் ரத்து.. சிக்கலில் விஸ்தாரா..

01:07 PM Apr 02, 2024 IST | Mari Thangam
அடுத்தடுத்து விமானங்கள் ரத்து   சிக்கலில் விஸ்தாரா
Advertisement

நாடு முழுவதும் விஸ்தாரா விமானங்கள் ரத்து மற்றும் தாமதங்கள் தொடர்பாக தொடர்ந்து புகார்கள் அதிகரித்து வரும் நிலையில், விஸ்தாரா நிறுவனத்திடம் விரிவான அறிக்கையை சமர்பிக்க சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

அடுத்தடுத்து விமானங்களை திடீரென ரத்து செய்வது, குறிப்பிட்ட நேரத்தில் விமானங்களை இயக்காதது என்று விஸ்தாரா விமானங்களில் பயணம் செய்வதற்காக முன்பதிவு செய்த பயணிகள் தொடர் பிரச்சினைகளைச் சந்தித்து வருகின்றனர்.

கடந்த வாரத்தில் மட்டுமே 100க்கும் மேற்பட்ட விமானங்களை எந்தவிதமான முன் அறிவிப்பும் இன்றி, திடீரென ரத்து செய்துள்ளது விஸ்தாரா. சில வாரங்களுக்கு முன்பாகவே தங்களின் பயணத்தை திட்டமிட்டு, முன்பதிவு செய்திருக்கும் பயணிகள், இப்படி திடீரென ரத்து செய்வதால், கடைசி நேரத்தில் பிற விமானங்களிலும் டிக்கெட் இல்லாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

இதுதொடர்பாக விமான போக்குவரத்து அமைச்சகம் விஸ்தாராவிடம் இருந்து தொடர் ரத்து மற்றும் அடிக்கடி நேரும் தாமதத்திற்கான காரணங்கள் குறித்து விரிவான அறிக்கையை சமர்பிக்க உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக விஸ்தாரா செய்தித் தொடர்பாளர் கூறியதாவது, “எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்தை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். எங்களது வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியத்தை குறைக்க அதிக அக்கறையுடன் உழைக்கிறோம். எங்கள் நெட்வொர்க் முழுவதும் போதுமான இணைப்பை உறுதி செய்வதற்காக, நாங்கள் இயக்கும் விமானங்களின் எண்ணிக்கையை தற்காலிகமாக குறைக்க முடிவு செய்துள்ளோம்" என்றார்.

மேலும், "பயணிகளின் அசெளகர்யங்களைக் குறைக்க நாங்கள் மாற்று விமான தேர்வுகளையோ அல்லது பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு பொருந்தும் வகையில் பணத்தைத் திரும்ப அளிக்கிறோம். இந்த இடையூறுகள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம். அதற்காக அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம். நிலைமையை சீராக்க நாங்கள் கவனத்துடன் பணியாற்றி வருகிறோம், விரைவில் எங்கள் வழக்கமான திறனை மீண்டும் தொடங்குவோம்" என்றார்.

Tags :
Advertisement