ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி மாதம் இடைத்தேர்தல்? தேர்தல் அதிகாரிக்கு பறந்த தகவல்..!!
ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிமீண்டும் இடைத்தேர்தலை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாநகராட்சியில் உள்ள 60-வார்டுகளில் 37-வார்டுகள் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உள்ளாக வருகிறது. பரப்பளவில் சிறியதாக உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 53- வாக்குச்சாவடி மையங்களில் உள்ளன. அதில், உள்ள 237 வாக்குச்சாவடியில் 110,305- ஆண் வாக்காளர்களும், 117,142 பெண் வாக்காளர்களும் 33- மாற்றுப் பாலினத்தவர்களும் என மொத்தம் 227,480 வாக்காளர்கள் உள்ளனர்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈ வி கே எஸ் இளங்கோவன் மறைவையெடுத்து தொகுதி காலியாக உள்ளதாக சட்டப்பேரவை செயலகம் தேர்தல் தேர்தல் அதிகாரிக்கு தெரியப்படுத்தியது. கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் தமிழகமே உற்று நோக்கும் இடைத்தேர்தலாக அமைந்தது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார்.
வெற்றி பெற்ற அவர் உடல்நல குறைவு காரணமாக கடந்த சனிக்கிழமை மரணம் அடைந்தார். ஒரு சட்டப் பேரவை தொகுதி காலியாகும் பட்சத்தில் ஆறு மாத காலத்திற்குள் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். வரும் ஜனவரி அல்லது பிப்ரவரி மாத நடைபெற உள்ள டெல்லி சட்டமன்ற தேர்தல் உடன் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது..
Read more ; சபரிமலையில் அதிர்ச்சி..!! மாலை அணிவித்து கோயிலுக்கு வந்த தமிழக பக்தர் தற்கொலை..!! வைரலாகும் வீடியோ..!!