இன்னும் இரண்டே நாள் தான் டைம்... இளைஞர்கள் உடனே முன்பதிவு செய்ய வேண்டும்...!
மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிக்கான இணையதள முன்பதிவிற்கான கடைசி நாள் செப்டம்பர் 2-ம் தேதி ஆகும்.
கடந்த ஆண்டினைப்போலவே இந்த ஆண்டும் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் மாநிலம் முழுவதும் 2024 செப்டம்பரில் துவக்கி நடத்தப்படவுள்ளது. இவ்விளையாட்டுப் போட்டிகளில் வெவ்வேறு புதிய விளையாட்டுக்கள் சேர்க்கப்பட்டு பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் 27 விளையாட்டுக்கள் 53 வகைகளில் மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படப்படவுள்ளது.
இப்போட்டிகளில் கலந்து கொள்வதற்கான விவரத்தினை https://sdat.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்திட வேண்டும். மாநில அளவில் தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 இலட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும். குழு போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.75 ஆயிரமும், இரண்டாம் பரிசாக தலா ரூ.50 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.25 ஆயிரமும் பரிசாக வழங்கப்படவுள்ளது. இவ்வாண்டு தனிநபர் மற்றும் குழு போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு தமிழ்நாடு அரசால் முதன் முறையாக நான்காம் இடம் பெற்றவர்க்கும் மூன்றாம் பரிசிற்கு இணையாக பரிசு வழங்கப்படவுள்ளது.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அவர்களின் சீரிய முயற்சியால் இவ்வாண்டுக்கான தனிநபர் மற்றும் குழுப்போட்டிகளுக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.37 கோடியாக உயர்த்தி வழங்கப்படவுள்ளது. இப்போட்டிகளில் வழங்கப்படும் சான்றுகள் மூலம் உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் சலுகைகளும் பெற இயலும். தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 12 வயது முதல் வரை 19 வயது உள்ள பள்ளி மாணாக்கர்களுக்கும். 17 வயது முதல் 25 வயது வரை கல்லூரி மாணக்கர்களுக்கும். 15 வயது முதல் 35 வயது வரை பொதுப்பிரிவினருக்கும். அனைத்து வயது மாற்றுத்திறனாளிகளுக்கும் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளது.