For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

குழந்தையின் பாலினத்தை வெளிப்படுத்திய விவகாரம்: மன்னிப்பு கோரினர் யூடியூபர் இர்பான்..!

The issue of revealing the gender of the child: YouTuber Irfan apologized..!
10:12 AM May 22, 2024 IST | Kathir
குழந்தையின் பாலினத்தை வெளிப்படுத்திய விவகாரம்  மன்னிப்பு கோரினர் யூடியூபர் இர்பான்
Advertisement

பிரபல யூடியூபர் இர்பான் துபாய் சென்றபோது தனது மனைவியின் கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை (பெண்) என்று ஸ்கேன் பரிசோதனை செய்து தெரிந்து கொண்டுள்ளார். அதனை குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் அனைவருக்கும் தெரிவித்து அதனை கடந்த மே 19 ஆம் தேதி அவரது யூடியூப் சேனலின் மூலம் வெளியிட்டார். இந்த விடியோவை கண்டவர்கள், இதுபோன்று கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிந்து அதை பொதுவெளியில் வெளியிடுவது தவறு என்றும் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்தது.

Advertisement

தமிழ்நாட்டில், பெண் சிசுக்கொலையை தடுப்பதற்காக கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை மருத்துவர்கள் பரிசோதனை செய்து பெற்றோர்களும் தெரிவிக்கக் கூடாது என்ற சட்டம் அமலில் இருக்கிறது. அவ்வாறு தெரிவிக்கும் மருத்துவர்கள், ஸ்கேன் செண்டர்கள் மீதும் கருவின் பாலினத்தை கேட்கும் பெற்றோர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடம் உள்ளது.

இந்த நிலையில் இர்பான் வெளியிட்ட வீடியோ தொடர்பாக சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியதோடு அந்த வீடியோவை நீக்க வேண்டும் என யூடியூப் நிறுவனத்திற்கும் இர்பானுக்கும் நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில் கருவின் பாலினத்தை அறிவிப்பது சட்டப்படி குற்றம் எனவும், விதிமீறலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக மருத்துவத்துறை எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,”யூடியூபர் திரு. இர்பான் என்பவர் தான் துபாய் சென்ற போது தனது மனைவியின் கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை ஸ்கேன் பரிசோதனை செய்து தெரிந்து கொண்டதாகவும் அதனை குடும்ப நிகழ்ச்சி ஒன்றின் போது அங்கு குழுமியிருந்தவர்களிடம் தெரிவித்துள்ளார். அந்த நிகழ்வினை ஒளிப்படமாக எடுத்து 19.05.2024 அன்று தனது You tube Channal-ன் மூலம் வெளியிட்டுள்ளார். அதனை இதுவரை பல பார்வையாளர்கள் உலகம் முழுவதும் பார்த்தும் பகிர்ந்தும் உள்ளனர். மேலும், இந்தியாவில் சிசுவின் பாலினம் அறிவதும் அறிவிப்பதும் பாலின 1994 (PCPNDT ACT 1994) (Central Act 57 of 1994) ன் படி தடை செய்யப்பட்டுள்ளது. இத்தகைய செயலால், தமிழ்நாடு மட்டுமல்லாமல் அகில இந்திய அளவில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறையும். மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாகும் வாய்ப்புள்ளது.

எனவே, இதுபோன்ற செயலில் ஈடுபடும் நபர்களின் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, மாநில அமலாக்க அலுவலர். (PCPNDT ACT 1994) மற்றும் இயக்குநர். மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அவர்களால் திரு.இர்பான் அவர்களுக்கு 21.05.2024 அன்று பாலினத் தேர்வை தடை செய்தல் சட்ட விதிகளை மீறியதற்காக குறிப்பானை சார்பு செய்யப்பட்டுள்ளது. மேலும், திரு.இர்பான் அவர்களால் வலையொளி செய்யப்பட்ட ஒளிப்படத்தினை சமூக வலைதளங்களிலிருந்து உடனடியாக நீக்கிட வலையொளி தளத்திற்கும், கணினி குற்றம் (Cyber Crime)பிரிவிற்கும் 21.05.2024 நாளிட்ட கடிதம் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கருவின் பாலினம் அறிவதும் அறிவிக்கும் செயலில் ஈடுபடும் நபர்கள் ஸ்கேன் சென்டர்கள், மருத்துவமனைகள் மீது இந்த அரசு கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும்” என எச்சரிக்கப்பட்டிருந்தது.

தமிழக சுகாதாரத்துறை நோட்டு அனுப்புவதற்கு முன்னதாகவே யூட்யூப் நிறுவனத்தின் அறிவுறுத்தலால் இர்பான் அந்த வீடியோவை தனது ‘இர்பான்ஸ் வியூ’ யூட்யூப் சேனலில் இருந்து நீக்கிவிட்ட நிலையில், தற்போது குழந்தையின் பாலினத்தை வெளிப்படுத்திய விவகாரத்திற்கு மன்னிப்பு கேட்டுள்ளார் இர்பான்.

Tags :
Advertisement