முக்கிய தகவல்...! குரூப் 2 தேர்வு விடைத்தாள் எப்பொழுது வெளியாகும்...? முழு விவரம்
குரூப்-2 முதல்நிலைத் தேர்வுக்கான உத்தேச விடைத்தாள் ஒரு வாரத்தில் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும்.
தொழிலாளர் உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார்-பதிவாளர், தலைமைச்செயலக உதவி பிரிவு அலுவலர்,ஃபாரஸ்டர் உள்ளிட்ட குரூப்-2 பதவிகளில் 507 காலியிடங்களையும், அதேபோல், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், இந்துசமய அறநிலைய ஆட்சித் துறை தணிக்கை ஆய்வாளர், உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட குரூப்-2ஏ பதவிகளில் 1,820 காலியிடங்களையும் (மொத்தம் 2,327) நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த குரூப்-2, குரூப்-2 ஏதேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த ஜுன் மாதம் வெளியிட்டது.
தமிழகம் முழுவதும் 2,763 தேர்வு மையங்களில் மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த தேர்வை எழுதினார். தேர்வு காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெற்றது. தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள் கடினமாக இருந்ததாக தேர்வர்கள் கூறியுள்ளனர். முதல்நிலைத் தேர்வில் மெயின் தேர்வுக்கு ஒரு காலியிடத்துக்கு 10 பேர்' என்ற விகிதாச்சார அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவர். அந்த வகையில், தற்போது 2,327 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டிருப்பதால் சுமார் 24 ஆயிரம் பேர் மெயின் தேர்வெழுத தகுதி பெறுவர். ஒருவேளை, காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்தால் இன்னும் அதிகமானோருக்கு மெயின் தேர்வெழுத வாய்ப்புக் கிடைக்கும்.
குரூப்-2 முதல்நிலைத் தேர்வுக்கான உத்தேச விடைகள் ஒரு வாரத்தில் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும். உத்தேச விடைகளில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் தேவையான ஆதாரங்களுடன் ஆன்லைனில் முறையிடலாம். விடைத்தாள் மதிப்பீட்டு பணி 2 அல்லது 3 மாதங்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.