சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் தகவல்..!! உண்மையை உடைத்த ரிசர்வ் வங்கி..!! அப்படியெல்லாம் ஒரு திட்டமும் இல்லையாம்..!!
தற்போது டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் அதிகரித்து வரும் நிலையில், இதை அரசாங்கமே ஊக்குவித்து வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் புதிய நோட்டுகளை புழக்கத்தில் விடுவது சரியல்ல என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரூ.5,000 மதிப்புள்ள புதிய நோட்டை ஆர்பிஐ அறிமுகம் செய்யவுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வரும் நிலையில், அதை ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது.
இந்தியாவில் தற்போது மிகப்பெரிய ரூபாய் நோட்டு என்றால் அது ரூ.500 தான். ஆனால், ரூ.5,000 மதிப்புள்ள புதிய நோட்டை அறிமுகம் செய்வதாக கூறி வருவது பொய்யான தகவல் என்றும் இதை மக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்றும் ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது. உயர் மதிப்புடைய கரன்சி நோட்டுகள் இந்தியாவுக்கு புதிதல்ல. 1947இல் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு ரூ.5,000 மற்றும் ரூ.10,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன.
1978இல் அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய் தலைமையிலான அரசு, பெரிய ரூபாய் நோட்டுகள் செல்லாது என முடிவு செய்தபோது ரூ.1000, ரூ.5000, ரூ.10000 நோட்டுகள் தடை செய்யப்பட்டன. அதற்கு முன்னதாக சுமார் 24 ஆண்டுகள் உயர் மதிப்புடைய நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. இந்நிலையில், ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், புதிதாக பச்சை நிறத்தில் 5,000 ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்படும் என்று சமூக வலைதளங்களில் புகைப்படத்துடன் தகவல் பரவி வருகிறது.
இதை யாரும் நம்ப வேண்டாம். இந்த வதந்திகளில் எந்த உண்மையும் இல்லை என்று ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது. இந்தியாவில் தற்போது ரூ.500, ரூ. 200, ரூ. 100, ரூ. 50, ரூ.20 மற்றும் ரூ.10 நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Read More : தவெக-வின் 2-வது மாநாட்டில் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விஜய்..? என்ன செய்யப்போகிறார் தெரியுமா..?