மீண்டும் அதிர்ச்சி..!! பாழடைந்த கட்டிடத்தில் நடந்த பயங்கரம்..!! சக மருத்துவரால் பெண் மருத்துவர் பலாத்காரம்..!!
கொல்கத்தாவில் மருத்துவக் கல்லூரி பயிற்சி மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியரில், அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில் இளநிலை பெண் மருத்துவா், சக மருத்துவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இது தொடா்பாக அந்த மருத்துவரைக் காவல் துறையினா் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து குவாலியா் நகர காவல் துறை கண்காணிப்பாளா் அசோக் ஜடோன் கூறுகையில், “குவாலியா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தோ்வுக்காக வந்த 25 வயது இளநிலை பெண் மருத்துவா், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கல்லூரியின் பெண்கள் விடுதியில் தங்கியுள்ளார். விடுமுறை தினம் என்பதால் விடுதியில் அதிகமான மாணவிகள் இல்லை.
அப்போது, அவருடன் படித்த சக மருத்துவா் ஒருவா், அவரிடம் பேச வேண்டுமென்று வெளியே அழைத்து சென்றுள்ளாா். அதனை நம்பிச் சென்ற பெண் மருத்துவரை அதே வளாகத்தில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த கட்டிடத்திற்கு அழைத்துச் சென்று மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த சம்பவம் தொடா்பாக பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். அதன் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து பலாத்காரம் செய்த மருத்துவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.