For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ்... ஓராண்டுக்கு NASA கொடுக்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

The information about how much income the astronaut of Indian origin earns in a year is now out.
03:37 PM Aug 29, 2024 IST | Mari Thangam
விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ்     ஓராண்டுக்கு nasa கொடுக்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா
Advertisement

இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ஓராண்டுக்கு எவ்வளவு வருவாயை ஈட்டுகிறார் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

Advertisement

அமெரிக்காவை சேர்ந்த விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் ஸ்டார்லைனர் ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளிக்கு சுனிதா வில்லியம்ஸ் (வயது 58) மற்றும் மூத்த விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் (வயது 61) ஆகியோர் கடந்த ஜூன் 5ஆம் தேதி பயணம் மேற்கொண்டனர். ஜூன் 5அம் தேதி புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து இரவு 8.22 மணிக்கு வெற்றிகரமாக புறப்பட்டு, ஜூன் 6ஆம் தேதி சர்வதேச விண்வெளி நிலையம் சென்றடைந்தனர்.

9 நாட்கள் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஆய்வுகள் நடத்தினர். பின்னர் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமி திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. ஜூன் 22ஆம் தேதியே இருவரும் பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும். ஆனால், விண்கலத்தில் வாயுக்கசிவு உள்ளிட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக பூமி வருவது ஒத்திவைக்கப்பட்டது. ஸ்டார்லைனரின் தொழில்நுட்ப கோளாறுகள் இன்னும் சரி செய்யப்படாததால், இன்று வரை இருவரும் பூமிக்கு திரும்பாமல் சர்வதேச விண்வெளி மையத்திலேயே சிக்கி தவிக்கின்றனர். சுனிதா மற்றும் புட்ச் இருவரும் அடுத்த ஆண்டு பிப்ரவரியில்தான் பூமிக்கு திரும்புவார்கள் என்றும் நாசா தரப்பில் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை ஓராண்டுக்கு எவ்வளவு வருவாயை ஈட்டுகிறார் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. விண்வெளி வீரர்கள் வரிசையில் சுனிதா வில்லியம்ஸிற்கு தனியிடம் உள்ளது. நாசாவின் அனுபவம் வாய்ந்த மூத்த விண்வெளி வீரர்களில் ஒருவராக சுனிதா வில்லியம்ஸ் அறியப்படுகிறார். இது அவரது நான்காவது விண்வெளி பயணமாகும். மொத்தம் 322 நாட்கள் அவர் விண்வெளியில் இருந்துள்ளார். இவர் தனது விண்வெளி பயணத்தின் போது பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளார்.

சுனிதா வில்லியம்ஸின் தந்தை தீபக் பாண்டியா இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் மெஹ்சானா பகுதியைச் சேர்ந்தவர். சுனிதாவின் தாயார் உர்சுலின் போனி ஸ்லோவேனியன் அமெரிக்கர் ஆவார். அந்த வகையில் சுனிதா வில்லியம்ஸ் பல்வேறு பாரம்பரியங்களில் இருந்து வந்தவர். சுனிதா வில்லியம்ஸ் ஓராண்டுக்கு வாங்கும் வருவாய் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. நாசாவின் அறிக்கைகளின்படி, விண்வெளி வீரர்களுக்கு ஆண்டு சம்பளம் சுமார் 152,258 அமெரிக்க டாலர்கள் ஆகும். இது வருடத்திற்கு இந்திய ரூபாய் மதிப்பில் 1 கோடியே 26 லட்சத்து 38 ஆயிரத்து 434 ஆகும்.

Read more ; ஒரு வாரத்திற்கு தமிழ்நாட்டில் இந்த நிலைதான்..!! வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!

Tags :
Advertisement