For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மார்ச் 15-ம் தேதி வரை டைம்....! மாலத்தீவில் இருக்கும் இந்திய ராணுவம் வெளியேற வேண்டும்...!

05:30 AM Jan 15, 2024 IST | 1newsnationuser2
மார்ச் 15 ம் தேதி வரை டைம்       மாலத்தீவில் இருக்கும் இந்திய ராணுவம் வெளியேற வேண்டும்
Advertisement

மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவத்தை திரும்பப் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும், இந்தியாவுக்கு எதிராகவும்மாலத்தீவு அமைச்சர்கள் 3 பேர் கருத்து தெரிவித்ததை அடுத்து, அந்நாட்டுக்கு சுற்றுலா செல்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் என்ற பிரச்சாரம் இந்தியாவில் தீவிரமடைந்தது.

Advertisement

இதை அடுத்து ஒரே சீனா கொள்கையை மாலத்தீவு உறுதியாக ஆதரிக்கிறது என மாலத்தீவு பிரதமர் கூறினார். தைவான் சீனாவின் பிரிக்க முடியாத பகுதி. சீனாவின் இறையாண்மையை குறைத்த மதிப்பிடும் எந்த ஒரு விஷயத்தையும் மாலத்தீவு எதிர்க்கும். தைவானுடன் அதிகாரபூர்வ உறவை மாலத்தீவு ஒருபோதும் கொள்ளாது. சீனாவின் உள் விவகாரங்களில் வெளிப்புற தலையீட்டை மாலத்தீவு எதிர்க்கிறது. தேசிய ஒருங்கிணைப்புக்காக சீனா எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் மாலத்தீவு ஆதரிக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவத்தை திரும்பப் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் 15ம் தேதிக்குள் மாலத்தீவில் இருக்கும் இந்திய ராணுவம் வெளியேற வேண்டும். வேறு எந்த நாட்டின் ராணுவம் இங்கே இருந்தாலும் எனது நிலைப்பாடு இதுதான் என மாலத்தீவு அதிபர் முகம்மது முய்சு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சுமார் 70 இந்திய ராணுவ வீரர்கள், மாலத்தீவில் உள்ள ரேடார் நிலையங்கள், கண்காணிப்பு விமானங்களை பராமரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement