முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. நவம்பரில் வெளுக்க போகும் கனமழை..!! தப்பிக்குமா தமிழகம்?

The India Meteorological Department has announced that a low pressure area is forming over the Bay of Bengal.
06:51 PM Nov 01, 2024 IST | Mari Thangam
Advertisement

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் நவம்பர் 2வது வாரத்தில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழ்நாடு, ஆந்திரா கடற்கரையை நோக்கி நகரும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Advertisement

இது தொடர்பாக இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளாவில் நவம்பர் மாதத்தில் இயல்பை விட கூடுதலாக மழை பெய்யும். நவம்பர் இரண்டாவது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு உட்பட தென் மாநிலங்களில் நவம்பரில் 123 சதவீதம் அதிக மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளில் இந்த ஆண்டு இயல்பை விட அதிக மழை நவம்பர் மாதத்தில் பெய்யும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் தமிழகத்தில் இயல்பான அளவு மழை பெய்யும் என்றும் ஒரு சில இடங்களில் இயல்புக்கு குறைவான அளவில் மழை பதிவாகும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஆனால் நவம்பர் இரண்டாவது வாரத்தில் படிப்படியாக மழையின் அளவு அதிகரித்து இயல்பை விட அதிக மழைப்பொழிவு பதிவாகும் எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதாவது இயல்பை விட 23 சதவீதம் அதிகமாக மழைப் பொழிவு இருக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நவம்பர் முதல் வார இறுதியில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. நவம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழ்நாடு, ஆந்திரா கடற்கரையை நோக்கி நகர வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் நவம்பர் இரண்டாவது வாரத்தில் தமிழகத்திற்கு அதிக மழைப் பொழிவு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more ; “தமிழர்களுக்கு என்று ஒரு தனி மாநிலம்”..!! போராளிகளின் தியாகங்களை நினைவுக் கூர்ந்த விஜய்..!!

Tags :
Heavy rainIndia Meteorological DepartmentTamilnadu
Advertisement
Next Article