For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"இண்டியா கூட்டணிக்கு தொலைநோக்குப் பார்வையோ, நம்பிக்கையோ இல்லை" - பிரதமர் மோடி

04:01 PM Apr 16, 2024 IST | Mari Thangam
 இண்டியா கூட்டணிக்கு தொலைநோக்குப் பார்வையோ  நம்பிக்கையோ இல்லை    பிரதமர் மோடி
Advertisement

இண்டியா கூட்டணிக்கு தொலைநோக்குப் பார்வையும் இல்லை, நம்பிக்கையும் இல்லை, இதுவரை எந்த சாதனையும் இல்லை என பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.

Advertisement

பீகார் மாநிலம் கயாவில் இன்று (ஏப். 16) பாஜக சார்பில் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். அவர் நிகழ்ச்சியில் பேசியதாவது, "இந்தியா வளமானதாக மாற வேண்டும் என்பதே அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவரின் கனவு. ஏழைகளுக்கு 3 கோடி வீடுகள், அடுத்த 5 ஆண்டுகளுக்கு இலவச ரேஷன், 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும். ரூ.5 லட்சம், பிரதமர்-கிசான் சம்மன் நிதி தொடரும் இவை அனைத்தும் மோடியின் உத்தரவாதங்கள்.

பாஜக தேர்தல் அறிக்கையில், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும், ஒவ்வொரு துறைக்கும் ஒரு திட்ட வரைபடம் உள்ளது. இளைஞர்கள் வேலை தேடி வெளியே செல்ல வேண்டியதில்லை. கடந்த 10 ஆண்டுகளில் ஒரு புரட்சி ஏற்பட்டுள்ளது. நாட்டில் 10 கோடி பெண்கள் சுயஉதவி குழுக்களுடன் இணைந்துள்ளனர். பிஹாரில் 1.15 கோடி பெண்களும், கயாவைச் சேர்ந்த 5.15 லட்சம் பெண்களும் சுயஉதவி குழுக்களுடன் இணைந்துள்ளனர்.

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அரசு இருந்தபோது, பிஹார் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.150 கோடிக்கும் குறைவாகவே நிதி ஒதுக்கப்பட்டது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த 10 ஆண்டுகளில் இந்தக் குழுக்களுக்கு ரூ.40,000 கோடிக்கு மேல் நிதி வழங்கியுள்ளது. வளர்ச்சி மற்றும் பாரம்பரியம் எங்கள் நிகழ்ச்சி நிரலில் உள்ளன.

இண்டியா அணிக்கு தொலைநோக்குப் பார்வையோ, நம்பிக்கையோ இல்லை. அவர்களிடம் எந்த சாதனையும் இல்லை. பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் செய்த பணிகளைச் சொல்லித்தான் அவர்கள் வாக்கு கேட்கிறார்கள். நிதிஷ் குமாரும், மத்திய அரசும் செய்த மக்கள் நலத் திட்டங்களுக்கு இண்டியா அணியினர் ஏன் உரிமை கோருகிறார்கள் என்பது ஒட்டுமொத்த பிஹாருக்கும் தெரியும்” எனத் தெரிவித்தார்.

Tags :
Advertisement