அமைச்சர் மீது சேற்றை வாரி வீசிய விவகாரம்..!! நடுரோட்டில் பெண்களிடம் அத்துமீறிய போலீஸ்..!! தரதரவென இழுத்துச் சென்ற கொடூரம்..!!
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம் மாவட்டத்தின் இருவேல்பட்டு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களுக்கு எந்தவித நிவாரண உதவிகளும் வழங்கவில்லை என டிசம்பர் 3ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் மீது போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் சேற்றை வாரி வீசினர்.
பாஜக நிர்வாகி விஜயராணி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ராமர் என்கிற ராமகிருஷ்ணன் ஆகியோர் அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வாரி வீசியதாக திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து, அமைச்சர் மீது சேற்றை வாரி அடித்த இருவரையும் இரவு நேரங்களில் போலீசார் தொல்லை செய்வதாகவும், அவர்களை கைது செய்ய முயற்சிப்பதாகவும் கூறி அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை அரசூர் கூட்டு சாலையில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்துவதற்காக வந்த போலீசார், பெண்கள் என்றும் பாராமல் நடு ரோட்டில் தர தரவென்று இழுத்துச் சென்றனர். அத்துமீறி பெண்கள் மீது கை வைத்ததாகவும், அங்கிருந்த வாலிபர்களை நாயைப் போல நடுரோட்டில் கை கால்களை பிடித்து இழுத்துச் சென்றதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பெண் காவலர்கள் இல்லாமல் பெண்கள் மீது போலீசார் கை வைத்து இழுத்து சம்பவம் தற்போது சர்ச்சையாகி உளது.
Read More : ”எம்ஜிஆரே இதைத்தான் செய்தார்”..!! ”ஏன் விஜய்யால் செய்ய முடியவில்லையா”..? நடிகை கஸ்தூரி பரபரப்பு பேட்டி..!!