”எம்ஜிஆரே இதைத்தான் செய்தார்”..!! ”ஏன் விஜய்யால் செய்ய முடியவில்லையா”..? நடிகை கஸ்தூரி பரபரப்பு பேட்டி..!!
நடிகர் விஜய் கடந்தாண்டு பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கினார். அக்டோபர் மாதம் விக்கிரவாண்டி வி.சாலையில் கட்சியின் முதல் மாநில மாநாட்டையும் பிரம்மாண்டமாக நடத்தினார். அந்த மாநாட்டுக்கு கூடிய கூட்டம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. 2026ஆம் ஆண்டில் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஆயத்தப் பணிகளில் தவெகவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என தவெக அறிவித்துள்ளது. மேலும் அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் இந்த தேர்தலில் போட்டியிடாததால் திமுக - நாம் தமிழர் கட்சி நேரடியாக மோதுகிறது. மேலும், தவெக தொடங்கி ஓராண்டு ஆகும் நிலையில், இதுவரை மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்படாமல் இருந்தது. சமீபத்தில் தான், இதற்கான ஆலோசனைகள் நடத்தப்பட்டு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். அதிலும், சில சலசலப்புகள் ஏற்பட்டது.
இந்நிலையில், நடிகை கஸ்தூரி தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், “தமிழக வெற்றிக் கழகம் ஏன் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை. இந்த தேர்தலில் போட்டியிட்டு தனது பலத்தை விஜய் நிரூபித்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும், இடைத்தேர்தலில் தவெக தோற்றாலும் விஜய்யை யாரும் விமர்சிக்க மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார். எம்ஜிஆர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு தான் தனது பலத்தை நிரூபித்ததாக நடிகர் கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
மேலும், விஜய் அரசியலுக்கு வந்துள்ளதை வரவேற்கிறேன். கண்டிப்பாக மாற்றம் தேவை. விஜய்க்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்திற்கு நிச்சயம் மாற்றம் வரும் என நிறைய பேர் நம்புகிறார்கள். விஜய் அரசியல் வாதியாக இன்னும் நன்றாக செயல்பட வேண்டும். ரொம்ப தயங்கி தயங்கி ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்கிறார். அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் விஜய் யோசித்து செயல்பட்டுள்ளார்” என்று பேசியுள்ளார்.
Read More : ”SAVE அரிட்டாப்பட்டி”..!! பாலமேடு ஜல்லிக்கட்டில் எதிரொலித்த டங்ஸ்டன் திட்ட எதிர்ப்பு போஸ்டர்..!!