கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. நேரில் பார்த்த மாமியாரை கொன்று நாடகமாடிய பெண்..!! சிக்கியது எப்படி?
கள்ளக்காதலனுடன் சேர்ந்து மாமியாரை மருமகள் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த நெரும்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 42). இவரது மனைவி அமுல் (38). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ராஜசேகரின் தாயார் லட்சுமி (58) தன்னுடைய மகன் ராஜசேகரனுடன் வசித்து வந்தார். ராஜசேகர் வேலைக்காக அடிக்கடி வெளியூர் செல்வது வழக்கம்.
இதனிடையே அமுலுக்கு அதே பகுதியை சேர்ந்த சரவணன் (42) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளதாம். ராஐசேகர் வீட்டில் இல்லாத நேரத்தில் இருவரும் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதை அறிந்த மாமியார் லட்சுமி அமுலை கண்டித்துள்ளார். இதுகுறித்து ராஜசேகரனிடம் கூறிவிடுவோரோ என்ற அச்சத்தில் மாமியாரை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார்.
இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை லட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அந்த பகுதி மக்கள் திருக்கழுக்குன்றம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் லட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனை செய்ததில் லட்சுமியின் கழுத்தை நெரித்து தூக்கில் தொங்கவிட்டிருக்கலாம் என்றும் லட்சுமி உடலில் காயங்கள் மற்றும் கைரேகைகள் உள்ளதாகவும் தெரியவந்தது. இந்த அறிக்கையை அடிப்படையாக வைத்து போலீசார் அந்த பகுதியில் உள்ள அக்கம் பக்கத்தினரை விசாரித்தனர். அப்போது அமுலுக்கும் சரவணனுக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்தது போலீசாருக்கு தெரியவந்தது.
மருமகள் அமலிடம் போலீசார் துருவி துருவி விசாரணை மேற்கொண்டதில், தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். ராஜசேகரின் மனைவி அமுல் 38, அவரது தோழி பாரதி, கள்ளக்காதலனான, அதே ஊரைச் சேர்ந்த சரவணன் 40 ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read more : Breaking : பத்திரிகையாளர் குடும்ப நிதி ரூ.10 லட்சமாக உயர்வு.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..