Breaking : பத்திரிகையாளர் குடும்ப நிதி ரூ.10 லட்சமாக உயர்வு.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..
பத்திரிகையாளர் குடும்ப நிதியை உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் “ 20 ஆண்டுகள் பணியாற்றி, பணியில் இருக்கும் போது இறக்கும் பத்திரிகையாளர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி வழங்கப்படும்..
15 ஆண்டுகள் பணியாற்றி பணியில் இருக்கும் போது இறக்கும் பத்திரிகையாளர் குடும்பத்திற்கு ரூ.7.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.
10 ஆண்டுகள் பணியாற்றி, பணியில் இருக்கும் போது இறக்கும் பத்திரிகையாளர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.
5 ஆண்டுகள் பணியாற்றி பணியில் இருக்கும் போது இறக்கும் பத்திரிகையாளர் குடும்பத்திற்கு ரூ.2.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடைமுறையில் உள்ள விதிகளின் படி, பத்திரிகையாளர் குடும்ப நிதியை உயர்த்தி வழங்க ஆணையிடுவதாகவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : வீட்டில் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்..? வருமான வரி விதிகளை தெரிஞ்சுக்கோங்க..