படிக்க வைத்த கணவன்..! அரசு வேலை கிடைச்சதும் கழற்றிவிட்ட மனைவி…!
உ.பி.யில் அரசு வேலை கிடைத்ததும் படிக்க வைத்த கணவரை மனைவி கழற்றிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலம் ஜான்சி பகுதியை சேர்ந்தவர் நீரஜ். தச்சு வேலை செய்யும் இவர், ரிச்சா சோனி என்ற பெண்ணை கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்து கொண்டார்.
தான் வேலை செய்து கிடைத்த கொஞ்சம் பணத்தில் தனது மனைவியை ரிச்சாவை நீரஜ் படிக்க வைத்துள்ளார். அவளுடைய பயிற்சிக்கான கட்டணத்தையும் செலுத்தி படிக்க கஷ்டப்பட்டு வைத்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் ரிச்சா சோனிக்கு அரசு வேலை கிடைத்துள்ளது.
வேலை கிடைத்ததும் கணவனை பிரிந்து சென்றது மட்டுமல்லாமல் அவருடன் எடுத்த திருமண புகைப்படங்கள் அனைத்தும் எடிட் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார். இதனையறிந்த நீரஜ், மனவேதனையில் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
read more.. கிரெடிட் கார்டில் இந்த விஷயத்தை செய்து சிக்கலில் மாட்டிக்காதீங்க..!! கண்டிப்பா இதை தெரிஞ்சிக்கோங்க..!!