அலறவிடும் HMPV வைரஸ்!. 'உடனடியாகத் தெரிவிக்கவும்; மருத்துவமனைகள் விழிப்புடன் இருக்கவும்!. சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தல்!
சீனாவை அச்சுறுத்திவரும் மனித மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) எதிரொலியால், காய்ச்சல் போன்ற நோய் (ஐஎல்ஐ) மற்றும் கடுமையான சுவாச நோய்த்தொற்று (எஸ்ஏஆர்ஐ) ஆகியவற்றை உடனடியாக ஐஎச்ஐபி போர்டல் மூலம் தெரிவிக்க மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குளிர்காலம் தொடங்கியுள்ளநிலையில், தலைநகர் டெல்லி, காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடும் குளிர் வாட்டி வதைத்து வருகிறது. இதனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். அதாவது, சளி, காயச்சல் உள்ளிட்டவைகள் அதிகளவில் பாதித்து வருகிறது. இந்தநிலையில், சீனாவில் மனித மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) வெடித்ததால் உலகளவில் உடல்நலக் கவலைகள் அதிகரித்துள்ளன, இது கோவிட்-19 போன்ற காய்ச்சல் போன்ற அறிகுறிகளைக் கொண்டுள்ளது. இதை உலகின் பல்வேறு நாடுகளும் கண்காணித்து வருகின்றன. இது சம்பந்தமாக, டெல்லி சுகாதார அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 5, 2025) மனித மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) மற்றும் பிற சுவாச வைரஸ்கள் தொடர்பான சுகாதார சவால்களுக்கு தயார்நிலையை உறுதிப்படுத்த ஒரு ஆலோசனையை வழங்கியுள்ளனர்.
அறிக்கையின்படி, சுகாதார சேவைகள் இயக்குநர் ஜெனரல் டாக்டர் வந்தனா பாக்கா ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் சுவாச நோய்களை சமாளிக்க தயார்நிலை குறித்து விவாதிக்க தலைமை மாவட்ட மருத்துவ அதிகாரிகள் மற்றும் ஐடிஎஸ்பியின் மாநில திட்ட அதிகாரிகளுடன் ஒரு கூட்டத்தை நடத்தினார். இந்த கூட்டத்தில், காய்ச்சல் போன்ற நோய் (ஐஎல்ஐ) மற்றும் கடுமையான சுவாச நோய்த்தொற்று (எஸ்ஏஆர்ஐ) ஆகியவற்றை உடனடியாக ஐஎச்ஐபி போர்டல் மூலம் தெரிவிக்க மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குளிர் நாட்களில் சுவாச வைரஸ் தொற்றுகள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், இத்தகைய வைரஸ்களைக் கையாள இந்திய மருத்துவமனைகள் முழுமையாக தயாராக உள்ளன. இருப்பினும் இது முழுமையாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று சுகாதார துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Readmore: ஜன. 9,10ம் தேதிகளில் UmagineTN 2025 தகவல் தொழில்நுட்ப மாநாடு!. முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.