For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!! அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்..!! சவரனுக்கு எவ்வளவு உயர்வு..?

The price of 22 carat jewelry in Chennai rose by Rs 400 to Rs 53,760.
10:56 AM Sep 06, 2024 IST | Chella
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை     அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்     சவரனுக்கு எவ்வளவு உயர்வு
Advertisement

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.53,760-க்கு விற்பனையாகிறது.

Advertisement

தங்கம் விலை அவ்வப்போது உயர்வதும், குறைவதுமாக போக்கு காட்டி வந்தாலும், அடிப்படையில் கனிசமாக ஏற்றம் கண்டுள்ளதே உண்மை. மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளியின் இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டதை அடுத்து, தங்கம் விலை அதிரடியாக குறைந்துவிடும் என்று மக்கள் எதிர்பார்த்தனர்.

அதற்கேற்ப கடந்த மாதம் ரூ.5,000 வரை தங்கம் விலையு குறைந்தது. தொடர்ந்து குறையும் என எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அந்தவகையில் இன்று தங்கம் விலை அதிரடி ஏற்றம் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் 6,720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,760-க்கு விற்பனையாகிறது. அதேபோல், சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 2 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.920க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Read More : ”அறிவியல் வழியே முன்னேற்றத்துக்கான வழி”..!! புதிய வழிமுறைகளை வெளியிட முதல்வர் முக.ஸ்டாலின் உத்தரவு..!!

Tags :
Advertisement