முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

நீடிக்குமா பொன்முடியின் அமைச்சர் பதவி? இறுதி விசாரணையின் திக் திக் நிமிடங்கள்..!!

The High Court will conduct the final hearing today in another property transfer case against Minister Ponmudi. So again his post is wrong? Will it be taken away?
10:20 AM Aug 19, 2024 IST | Mari Thangam
Advertisement

அமைச்சர் பொன்முடிக்கு எதிரான மற்றாரு சொத்துக்குவிப்பு வழக்கில் உயர்நீதிமன்றம் இன்று இறுதி விசாரணையை நடத்துகிறது. எனவே மீண்டும் அவரது பதவி தப்புமா? பறிக்கப்படுமா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

Advertisement

1996 -2001 காலகட்டத்தில் திமுக ஆட்சி நடைபெற்றது. அப்போது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த பொன்முடி, தனது பதவியின் அதிகாரத்தை பயன்படுத்தி 1.36 கோடி ரூபாய் சொத்து குவித்ததாக பொன்முடி மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு விசாரணை பல கால கட்டங்களை கடந்து வேலூர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் பொன்முடி மற்றும் அவரது மனைவி விடுவிக்கப்பட்டனர். 

இந்தநிலையில் இந்த வழக்கு விசாரணை முறையாக நடைபெறவில்லையென கூறி, பொன்முடிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கடந்த ஆண்டு  ஆகஸ்ட் மாதம் தாமாக முன்வந்து மறுஆய்வுக்கு எடுத்தார். இந்த வழக்கில் இறுதி விசாரணை இன்னும் நடைபெறாத நிலையில் கடந்த மாதம் வழக்கு வந்த போது இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. எனவே இன்றைய இறுதி விசாரணையின் போது அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு எப்படி செல்லும் என அறிய திமுக மட்டுமில்லாமல் அரசியல் வட்டாரம் காத்துள்ளது. 

முன்னதாக 2006 - 2011 காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிக்கப்பட்ட வழக்கில் பொன்முடிக்கு 3 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டதால் அமைச்சர் பதவியை இழந்தார். உச்சநீதிமன்றம் சென்று மீண்டும் தனது பதவியை திரும்ப பெற்றது குறிப்பிடத்தக்கது.

Read more ; தமிழ்நாட்டின் 50-வது தலைமைச் செயலாளராக முருகானந்தம் ஐஏஎஸ் நியமனம்..!!

Tags :
chennai high courtJustice Anand Venkateshminister ponmudi
Advertisement
Next Article