வேலை செய்யும் இடத்தில் பெண்களுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்துவதும் பாலியல் தொல்லை தான்..!! - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி
பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு அசவுகரியம் தரும் விரும்பத்தகாத செயல், சொல் பாலியல் துன்புறுத்தலே என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. அம்பத்தூர் தனியார் மார்க்கெட்டிங் அதிகாரிக்கு எதிராக அங்கு பணிபுரியும் 3 பெண்கள் பாலியல் புகார் அளித்திருந்தனர். புகாரை விசாரித்த நிறுவன விசாகா குழு, அதிகாரிக்கு 2 ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு தரக்கூடாது என பரிந்துரை செய்தது.
இந்த பரிந்துரையை எதிர்த்து மார்க்கெட்டிங் அதிகாரி தாக்கல் செய்த வழக்கு சென்னை தொழிலாளர் நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தனது தரப்பு விளக்கத்தை கூற வாய்ப்பு தராமல் விசாரணை அறிக்கை தாக்கல் எனக் கூறி, அதை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில், உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தனியார் நிறுவனம் தொடர்ந்த வழக்கு நீதிபதி மஞ்சுளா முன் விசாரணை நடைபெற்றது.
அப்போது தனியார் நிறுவனம் சார்பில் குற்றம் சாட்டப்பட்ட நபர், பெண்கள் வேலை பார்க்கும் போது தவறாக பார்ப்பது, தொட்டுப்பேசுவது போன்ற அசெளகரியமான செயல்களில் ஈடுபட்டு வந்ததாக விசாகா குழு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு அசவுகரியம் தரும் விரும்பத்தகாத செயல், சொல் பாலியல் துன்புறுத்தலே என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
Read more ; 979 பணியிடங்களுக்கு மே 25ல் யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு.. தகுதிகள் என்னென்ன..? விண்ணப்பிப்பது எப்படி?