“பெத்தவங்க திட்டுனா என்ன, உனக்கு நான் இருக்கேன் தங்கோ” வீட்டை விட்டு வெளியேறிய 13 வயது சிறுமிக்கு, 32 வயது நபர் செய்த காரியம்..
புதுச்சேரி சேதராப்பட்டு பகுதியில் 13 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், சிறுமியை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் கோவமடைந்த சிறுமி, இனி எனக்கு பெற்றோர் வேண்டாம் என்று வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், உடனடியாக சம்பவம் குறித்து சேதராப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த போலீசார், சிறுமியை தேடி வந்தனர்.
இதனிடையே, வீட்டை விட்டு சென்ற சிறுமி, சில தினங்களில் அவராகவே வீடு திரும்பியுள்ளார். அப்போது சிறுமியின் பெற்றோர், இத்தனை நாள் எங்கே சென்றாய் என்று விசாரித்துள்ளனர். அப்போது சிறுமி, வேலூரை சேர்ந்த 32 வயதான ஏழுமலை என்பவரை பார்க்க சென்றேன் என்று கூறியுள்ளார். சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில், ஓட்டுனராக வேலை செய்து வரும் ஏழுமலை, சிறுமியுடன் இன்ஸ்டெகிராம் மூலம் பழகியுள்ளார்.
இதையடுத்து, வீட்டை விட்டு வெளியே சென்றவுடன், சிறுமி ஏழுமலையைப் பார்க்க சென்னைக்கு சென்றுள்ளார். அப்போது ஏழுமலை, சிறுமியை அவரது வீட்டிற்க்கு அழைத்துச் சென்று, பாலியல் பலாத்தகாரம் செய்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சிடைந்த பெற்றோர், இது குறித்து உடனடியாக சேதராப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், ஏழுமலை மீது போஸ்கோ பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர். மேலும், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைக்க உள்ளனர்.