For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஹமாஸ் அமைப்பின் தளபதியை கொன்ற இஸ்ரேல்..! பயங்கரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் தொடரும்!. இஸ்ரேல் வார்னிங்!.

The Hamas commander behind the Oct. 7 attack was killed! The attack against the terrorists will continue! Israel Warning!.
09:30 AM Jan 01, 2025 IST | Kokila
ஹமாஸ் அமைப்பின் தளபதியை கொன்ற இஸ்ரேல்    பயங்கரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் தொடரும்   இஸ்ரேல் வார்னிங்
Advertisement

ஹமாஸ் அமைப்பின் நுக்பா படைப்பிரிவு தளபதி அப்துல்-ஹாதி சபா(Abd al-Hadi Sabah) கொல்லப்பட்டதை இஸ்ரேல் பாதுகாப்பு படை உறுதிப்படுத்தி இருக்கிறது. சமீபத்திய டிரோன் தாக்குதலில் அப்துல் ஹாதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது.

Advertisement

கடந்த 2023 அக்டோபர் 7 ஆம் தேதி கிபுட்ஸ் நிர் ஓஸ்-இல் நடத்தப்பட்ட கொடூர தாக்குதலை அப்துல் ஹாதி சபா வழிநடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. நுக்பா படைப்பிரிவு தளபதி தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸ் பகுதியில் வைத்து கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த எக்ஸ் தள பதிவில், "இஸ்ரேல் பாதுகாப்பு படையின் உளவுத்துறை மற்றும் ஐ.எஸ்.ஏ. தாக்குதலில் நுக்பா படைப்பிரிவு தளபதியான அப்துல் ஹாதி சபா கொல்லப்பட்டார்," என்று இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

கொல்லப்பட்ட அப்துல் ஹாதி சபா இஸ்ரேல் பாதுகாப்பு படைகளுக்கு எதிராக பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களை வழிநடத்தியுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. அக்டோபர் 7 ஆம் தேதி நடத்தப்பட்ட கொடூர தாக்குதலில் பின்புலமாக இருந்த அனைத்து பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடரும் என்று இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

Readmore: எச்சரிக்கை!. இந்த 2 பொருட்கள்தான் புற்றுநோய்க்கு காரணம்!. அதை உட்கொள்வதை நிறுத்துங்கள்!.

Tags :
Advertisement