பதவி விலகுகிறார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ..? - வெளியான பரபரப்பு தகவல்
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, லிபரல் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக தகவல் வெளியானது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கனடா நாட்டில் இந்த ஆண்டு அக்டோபரில் பொதுத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு பல முனைகளில் இருந்தும் நெருக்கடி அதிகரித்து வருகிறது. சர்வதேச அரங்கில் நெருக்கடிகளைச் சந்தித்து வரும் ட்ரூடோ, உள்நாட்டு அரசியலிலும் சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறார். அவரது சொந்த லிபரல் கட்சிக்குள்ளேயே அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. அரசாங்கத்தை ஆதரித்து வந்த புதிய ஜனநாயகக் கட்சி ஆதரவைத் தொடர மறுத்துள்ளது.
இந்தச் சூழலில் தான் கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, லிபரல் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தி குளோப் மற்றும் மெயில் ஊடகம், தங்களுக்கு கிடைத்த தகவலின்படி, ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்ய இருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது. ஜஸ்டின் ட்ரூடோ எப்போது ராஜினாமா பற்றி அறிவிப்பார் என்பது பற்றி தங்களுக்கு நிச்சயமாகத் தெரியாது, ஆனால் புதன்கிழமை நடைபெற இருஇருக்கும் செயற்குழு கூட்டத்திற்கு முன்பு அது நடக்கும் என்று எதிர்பார்ப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த தகவல் பற்றிய கேள்விக்கு கனடா பிரதமர் அலுவலகம் உடனடி பதில் அளிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜஸ்டின் ட்ரூடோ, பதவியை ராஜினாமா செய்துவிட்டு உடனடியாக பிரதமர் அலுவலகத்தில் இருந்து வெளியேறுவாரா அல்லது புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை பிரதமராக நீடிப்பாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் குறிப்பிடப்படுள்ளது.
ட்ரூடோ 2013 முதல் லிபரல் கட்சியின் தலைவராக இருந்து வருகிறார், அந்தக் கட்சி போராடிக்கொண்டிருந்த நேரத்தில், அதன் வரலாற்றில் முதல் முறையாக ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் மூன்றாவது இடத்திற்கு வீழ்ந்தது. பிரதமராக அவரது தலைமை கட்சிக்கு ஒரு குறிப்பிடத்தக்க திருப்பத்தை ஏற்படுத்தியது என்றும் அவர் வெளியேறுவது கட்சிக்கு நிரந்தர தலைவர் இல்லாமல் போய்விடும் என்றும் கூறப்படுகிறது. அதே நேரம், அக்டோபர் இறுதியில் தேர்தல் வரக்கூடிய நேரத்தில் இந்த எதிர்க்கட்சிக்கு வாய்ப்பாக அமையும் எனவும் கூறப்படுகிறது.
Read more : வந்த வேகத்தில் வெளியேறிய ஆளுநர்.. விளக்கம் அளித்த பதிவு சில நிமிடங்களில் நீக்கம்..!!