மெக்சிகோ வளைகுடா இனி அமெரிக்கா வளைகுடா என்று அழைக்கப்படும்!. முதல் நிர்வாக உத்தரவில் அதிபர் டிரம்ப் அதிரடி!
President Trump: அமெரிக்க நாட்டின் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள டிரம்ப் நேற்று அமெரிக்காவின் 47ஆவது அதிபராக பதவியேற்றார். அமெரிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து, உரையாற்றி அதிபர் டிரம்ப், அமெரிக்காவின் பொற்காலம் தொடங்கிவிட்டது. பலம் மிகுந்த, சுதந்திரமான, நம்பிக்கையான தேசத்தை உருவாக்குவதே நோக்கம்,. எனது ஆட்சி காலத்தில் ஒவ்வொரு நாளிலும் அமெரிக்காவுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
அமெரிக்கா இதுவரை இல்லாத அளவுக்கு வலிமையான நாடாக சீக்கிரம் மாறும். நான் கொலை தாக்குதலில் இருந்து தப்பித்து வந்திருக்கிறேன். நான் பிழைத்ததற்கு காரணம் உள்ளது. அமெரிக்காவை மீண்டும் மேலே கொண்டு வர கடவுள் எனக்கு தந்த வாய்ப்பு அது. இதற்கு முன் எப்போதும் கிடைக்காத வாய்ப்பு அமெரிக்காவுக்கு கிடைத்திருக்கிறது. அமெரிக்காவில் இந்த நொடி முதல் சுதந்திரம் பிறந்திருக்கிறது என்று குறிப்பிட்டார்.
நிற அடிப்படையில் தீண்டாமை இல்லாத சமுதாயத்தை உருவாக்குவோம். உற்பத்தி மையமாக தேசம் கட்டமைக்கப்படும். உலகில் சக்திவாய்ந்த ராணுவம் உடைய நாடாக அமெரிக்கா உருவெடுக்கும். நாட்டின் சவால்கள் அழிக்கப்படும். அமெரிக்காவின் பாதுகாப்பு பேச்சுரிமை மீட்கப்படும். பேச்சுரிமைக்கான கட்டுப்பாடுகள் நிக்கப்படுகின்றன. நாட்டில் நிலவும் துப்பாக்கி கலாச்சாரத்துக்கு முடிவு கட்டப்படும். அமெரிக்க நீதி துறையின் வன்முறை மற்றும் நியாயமற்ற ஆயுதமாக்கல் முடிவுக்கு வரும் என்று பேசினார்.
மின்சார வாகனங்கள் கட்டாயம் என்ற உத்தரவு திரும்பப் பெறப்படுகிறது. மக்கள் விரும்பிய வாகனங்களை வாங்கி பயன்படுத்தலாம். சட்டத்துக்கு உட்படாத சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அமெரிக்காவில் ஆண், பெண் இருபாலினங்கள் மட்டும் அங்கீகரிக்கப்படுகின்றன. இருபாலின கொள்கை மட்டுமே கடைபிடிக்கப்படும். எல்லை பாதுகாப்பு பிரச்சனைகளை முன்னாள் அதிபர் பைடனால் தீர்க்க முடியவில்லை. இயற்கை பேரிடர்களை சமாளிக்க அவரது நிர்வாகம் தவறிவிட்டது என்று குற்றம்சாட்டியுள்ளார்.
சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்த ஆபத்தான குற்றவாளிகளுக்கு அவரது நிர்வாகம் புகலிடம் அளித்தது. நாட்டின் தெற்கு எல்லையில் அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்படுகிறது.இதன் மூலம் சட்ட விரோத அகதிகளின் ஊடுருவல் தடுக்கப்படும். ஏற்கனவே அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய லட்சக்கணக்கானோர் நாட்டில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்.
பனாமா கால்வாயில் அமெரிக்க கப்பல்களுக்கு அதிக வரி வசூலிக்கப்படுகிறது. பனாமா கால்வாய் மீண்டும் அமெரிக்காவுடன் இணைக்கப்படும். மெக்ஸிகோ வளைகுடா இனி அமெரிக்கா வளைகுடா என்று அழைக்கப்படும் அமெரிக்கர்களின் நலனுக்காக அவர்களை வளப்படுத்த வெளிநாடுகளுக்கு மேலும் கூடுதல் வரி விதிக்கப்படும் போன்ற உள்ளிட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோப்புகளில் கையொப்பமிடவுள்ளதாக பேசியுள்ளார்.