DOGE இணைத் தலைவர் பதவியில் இருந்து விவேக் ராமசாமி விலகல்..!! பரபரப்பு தகவல்
அமெரிக்காவில் மிக முக்கிய அமைச்சரவை பொறுப்பான வெளியுறவுத்துறை செயலாளர் பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமியை கொண்டு வர டிரம்ப் இருப்பதாக செய்திகள் வந்தன. ஆனால் விவேக் ராமசாமியை புறக்கணித்து, செனட்டர் மார்கோ ரூபியோவை தனது இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்சிக்கு.. வெளியுறவுத்துறை செயலாளராக தேர்வு செய்ய டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. டிரம்பின் 2024 பிரச்சாரத்தின் போது அதில் முக்கிய பங்கு வகித்தவர் ரூபியோ. இவரின் தேர்வு பெரிய அளவில் கவனம் பெற்றது.
இந்த நிலையில், DOGE அமைப்பு இணைத் தலைவர் பதவியில் இருந்து விவேக் ராமசாமி விலகினார். அமெரிக்க அரசின் நிர்வாகத்தையும் திறன்பட மேம்படுத்தும் முக்கியமான அமைப்பாக DOGE செயல்படுகிறது, இந்த அமைப்பு அரசின் செலவுகளை குறைக்கும் முக்கிய அமைப்பாக இருக்கும் என டிரம்ப் அறிவித்தார். இந்த அமைப்பு விவேக் ராமசாமி மற்றும் எலான் மஸ்க் தலைமையில் இயங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது இதற்கும் வேட்டு வைக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. ஓகியோ மாகாண ஆளுநர் பதவிக்கு போட்டியிட விவேக் ராமசாமி திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.
Read more ; ஒரு நாளைக்கு எத்தனை கப் பிளாக் டீ குடிக்கிறீர்கள்?. ஆரோக்கியத்திற்கு பயனுள்ளதா?.