ஐஸ்கிரீம் பால் பொருள் அல்ல.. 18 சதவீதம் வரி விதிக்கப்படும்..!! - GST ஆணையம்
ஜிஎஸ்டி ஆணையம் ஐஸ்கிரீமை பால் பொருளாக வகைப்படுத்த மறுத்துவிட்டது. அதன் முக்கிய மூலப்பொருள் சர்க்கரை என்றும், பால் அல்ல எனவும் ஆணையம் கூறியது. ஜிஎஸ்டி ஆணையத்தின் ராஜஸ்தான் பெஞ்ச் ஐஸ்கிரீமை பால் தயாரிப்பாகக் கருத மறுத்து, அதன் முக்கிய மூலப்பொருள் சர்க்கரை என்று கூறியது. எனவே, பால் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 5 சதவீத ஜிஎஸ்டியின் வரம்புக்குள் ஐஸ்கீரிம் கொண்டு வர முடியாது. எனவே, அதற்கு 18 சதவீத ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.
VRB நுகர்வோர் தயாரிப்புகள் என்ற நிறுவனம் தனது தயாரிப்பான வெண்ணிலா கலவையை 5 சதவீத ஜிஎஸ்டியுடன் கூடிய தயாரிப்புகளின் பிரிவில் சேர்க்க ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தது. இந்த தயாரிப்பு இயற்கையான பாலில் இருந்து தயாரிக்கப்படுவதாகவும், இதற்கு 5 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட வேண்டும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் பால் மற்றும் சர்க்கரை அடங்கிய இந்த கலவையை 0404 என்ற தலைப்பின் கீழ் வகைப்படுத்தப்பட வேண்டும் என்று நிறுவனம் வாதிட்டது,
ஆணையம் இந்தக் கூற்றை நிராகரித்தது. ஐஸ்கீரிம் தயாரிப்பில் 61 சதவிகிதம் சர்க்கரை இருப்பதால் சர்க்கரையில் சிறிதளவு பால் திடப்பொருள் சேர்க்கப்படுகிறது. பால் திடப்பொருட்களில் சர்க்கரை சேர்க்கப்படவில்லை என்பதை ஆணையம் முடிவு செய்தது. ஸ்டெபிலைசர்கள் மற்றும் சுவையூட்டிகள் போன்ற சேர்க்கைகளும் மென்மையான ஐஸ்கிரீமில் சேர்க்கப்படுகின்றன,
இது இயற்கை பால் பொருட்களின் வகையிலிருந்து வெளியேறுகிறது என்று ஆணையம் அதன் முடிவில் கூறியது. இதனடிப்படையில், பால் பொருட்கள் கீழ் பொருளை வகைப்படுத்த வேண்டும் என்ற விண்ணப்பதாரரின் வாதம் நிராகரிக்கப்பட்டது. கடந்த காலங்களிலும் பால் பொருட்கள் தொடர்பில் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன. முன்னதாக, ஏஏஆர், புளித்த பால் தயாரிப்பான லஸ்ஸியை ஜிஎஸ்டியில் இருந்து விடுவித்தது. ஆனால் சுவையூட்டும் பாலுக்கு 12% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டது.
Read more ; காசாவில் காயமடைந்த தங்கையை தோலில் சுமந்து செல்லும் சிறுமி..!! – நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ