வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை...! MP கனிமொழி காட்டம்...
திருக்குறள் மற்றும் திருவள்ளுவரை பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை.
திருவள்ளுவர் தினத்தை ஒட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்ட சமூகவலைதளப் பதிவில், “#திருவள்ளுவர் தினத்தில், ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த, மதிப்புக்குரிய கவிஞரும், சிறந்த தத்துவஞானியும், பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
காலத்தால் அழிக்க இயலாத அவரது ஞானம் நமது தேசத்தின் சிந்தனை மற்றும அடையாளத்தை வடிவமைத்து, வளப்படுத்தி ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் வழிகாட்டியாகவும், உத்வேகத்தின் ஆதாரமாகவும் இருக்கிறது. இந்தப் புனித நாளில் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என காவி நிறத்தில் இருக்கும் திருவள்ளுவரின் புகைப்படத்தை பதிவிட்டு தனது வாழ்த்து தெரிவித்துள்ளார்.
காவி உடையில் இருக்கும் திருவள்ளுவரின் உருவப்படத்தைப் பகிர்ந்து, அவரை சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவி என்று குறிப்பிட்டு சமூகவலைதளத்தில் கருத்தைப் பகிர்ந்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. இதற்கு பதில் கொடுத்துள்ள திமுக எம்பி கனிமொழி; திருக்குறள் மற்றும் திருவள்ளுவரை பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை. வள்ளுவரின் நிறம் மனிதநேயம் தான், வேண்டுமென்றால் வள்ளுவருக்கு கருப்பு நிறம் போடலாம் என திமுக எம்பி கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார்.