For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பறிபோகிறது இபிஎஸின் பொதுச்செயலாளர் பதவி..? எச்சரிக்கும் சிவி சண்முகம்..!! பரபரப்பை கிளப்பிய திருச்சி சூர்யா..!!

The only way to escape this problem is for Edappadi Palaniswami to surrender to the BJP.
08:23 AM Nov 25, 2024 IST | Chella
பறிபோகிறது இபிஎஸின் பொதுச்செயலாளர் பதவி    எச்சரிக்கும் சிவி சண்முகம்     பரபரப்பை கிளப்பிய திருச்சி சூர்யா
Advertisement

டிசம்பர் வரை தான் டைம். தை பிறந்து விட்டால் நான் யார் என்று தெரியும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சவால் விட்டு வந்ததாக கூறப்படும் வீடியோ ஒன்றை திருச்சி சூர்யா வெளியிட்டுள்ள சம்பவம் அதிமுகவில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Advertisement

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, கடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியை சந்தித்த நிலையில், லோக்சபா தேர்தலிலும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. இதனால், 2026ஆம் ஆண்டில் நடைபெற்றும் சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது ஆட்சியை மீண்டும் பிடித்துவிட வேண்டுமென அதிமுகவினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

இதற்காக மாவட்டம் தோறும் கள ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. ஆனால், இந்தக் கூட்டத்தில் சில கட்சிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டு, அது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதுவும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மேடையில் பேசிக்கொண்டிருக்கும்போதே, அதிமுக நிர்வாகிகள் சண்டை போட்டுக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், திருச்சி சூர்யா தனது எக்ஸ் தளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளார். அதில், சேலத்தில் நடைபெற்ற ஒரு பொதுக்குழு கூட்டத்தின் போது கட்சி நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி வீட்டில் சென்று தங்கியுள்ளார்களாம். அப்போது, 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தான் ஆட்சியை பிடிக்கும் என்றும் அதுவரை பொறுமையாக இருக்க வேண்டுமென்றும் நிர்வாகிகளிடம் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டாராம்.

அப்போது, திடீரென சீறிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், டிசம்பர் வரை தான் நான் பொறுமையாக இருப்பேன். தை பிறந்து விட்டால் நான் யாரென்று தெரியும் என்று எடப்பாடி பழனிசாமியிடமே சவால் விட்டதாக திருச்சி சூர்யா தெரிவித்துள்ளார். அதேபோல், 2026 சட்டமன்ற தேர்தல் அதிமுக வெற்றி பெறாவிட்டால், பொதுக்குழு உறுப்பினர்கள் ஒன்றுகூடி எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளர் பதவியை விட்டு தூக்க முடிவு செய்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனவே, இந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்க ஒரே வழி எடப்பாடி பழனிசாமி பாஜகவிடம் சரணடைவது மட்டும்தான். பாஜகவுடன் கூட்டணி வைத்தால், எடப்பாடி பழனிசாமியை பாஜக காப்பாற்றும். இல்லையென்றால், அவரை அப்படியே விட்டுவிடும் என்று திருச்சி சூர்யா கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More : தினமும் ரூ.42 முதலீடு செய்தால் மாதந்தோறும் ரூ.10,000 கிடைக்கும்..!! மத்திய அரசின் அசத்தல் திட்டம்..!! தம்பதிகளே மிஸ் பண்ணிடாதீங்க..!!

Tags :
Advertisement