தொடர் விடுமுறை.. சொந்த ஊருக்கு போறீங்களா? டோன்ட் டோரி..!! சென்னையிலிருந்து ஸ்பெஷல் பஸ்.. ஆஹா!!
தொடர் விடுமுறை, முகூர்த்த நாள், விநாயகர் சதுர்த்தி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து செப்.5 முதல் செப்.8 வரை பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது.
செப்டம்பர் 6 (வெள்ளிக் கிழமை) முகூர்த்தம், செப்டம்பர் 7 (சனிக்கிழமை) விநாயக சதுர்த்தி, செப்டம்பர் 8 (ஞாயிற்றுக் கிழமை) மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு செப்.5, 6 மற்றும் 7 ஆகிய நாட்களில் சென்னையில் இருந்தும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி விடுமுறை நாள், முகூர்த்த நாள் மற்றும் வார விடுமுறை நாட்களை கணக்கில் கொண்டு சென்னையில் இருந்து செப்டம்பர் 5ம் தேதி முதல் 8-ம் தேதி நான்கு நாட்களுக்கு முக்கிய நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது.
சென்னைக்கு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து 725 பேருந்துகளும் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 190 பேருந்துகளும் மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து 20 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. சிறப்பு பேருந்துகளில் பயணம் செய்ய முன்கூட்டியே முன்பதிவு செய்து கொள்ளுமாறு தமிழக அரசின் போக்குவரத்து துறை அறிவுறுத்தி உள்ளது.
சென்னையில் இருந்து திருச்சி, சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு 125 பேருந்துகளும் மற்றும் வரும் 8-ம் தேதி அன்று விநாயகர் சதூர்த்தி மற்றும் வார இறுதி விடுமுறை முடிந்து ஊர் திரும்ப ஏதுவாக மதுரை கோட்டத்திற்குட்பட்ட மதுரை, திண்டுக்கல், தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்களிலிருந்து சென்னை கிளாம்பாக்கத்திற்கு 120 பேருந்துகளும் மற்றும் பல்வேறு இடங்களுக்கு 100 பேருந்துகளும் இயக்கப்படுவதாக போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுவதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. மேலும் இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more ; அடுத்த 6 நாட்களுக்கு வெளுத்து வாங்கப்போகும் மழை..!! வானிலை ஆய்வு மையம் கொடுத்த வார்னிங்..!!