விவசாயிகளுக்கு குட்நியூஸ்.. உங்க பேங்க் அக்கவுண்டுக்கு ரூ. 2000 வரப்போகுது..!! வந்தாச்சு அறிவிப்பு..!!
விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு ஒன்றிய அரசு பிரதம மந்திரி கிசான் சம்மன் திட்டத்தின் வாயிலாக நிதி வழங்கி வருகிறது. ஆண்டுக்கு மூன்று தவணைகளாக மொத்தம் ரூ. 6 ஆயிரம் நிதி வழங்கப்பட்டு வருகிறது. இப்பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் PM kisan வாயிலாக 18 வது தவணை பணம் விவசாயிகளுக்கு எப்போது கிடைக்க போகிறது என்பது குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி பிஎம்-கிசான் திட்டத்தின் 18வது தவணையை செலுத்த அரசு தயாராக உள்ளது. யாருக்கெல்லாம் இந்தப் பணம் வழங்கப்படும் என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன. கீழே கொடுக்கப்பட்ட விவரங்களின்படி தெரிந்து கொள்ளுங்கள்.
பணம் வழங்கிய மத்திய அரசு: மொத்தமாக சுமார் 9.25 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு ரூ.20,000 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் மொத்தமாக ரூ.3.24 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. யாருக்கெல்லாம் இந்த பணம் வழங்கப்படும் என்பதை பார்க்கலாம்.
எப்படி சோதனை செய்வது?
இந்த திட்டத்தில் பணம் பெற நீங்கள் ஏற்கனவே இந்த திட்டத்தில் இணைந்திருக்க வேண்டும். இதற்கான திட்ட விண்ணப்பத்தை நிரப்பி, அதில் இணைய வேண்டும். மேலும் உங்களிடம் வங்கி கணக்கு இருக்க வேண்டும். மேலும் வங்கி கணக்கை கேஎப்சி உடன் சரிபார்த்து இருக்க வேண்டும். அதோடு இல்லாமல் உங்கள் போன் நம்பர் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும். சரி இந்த திட்டம் மூலம் உங்களுக்கு இந்த பணம் கிடைத்துள்ளதா என்று பார்க்க பின்வரும் வகையில் சோதனை செய்ய வேண்டும்.
ஸ்டெப் 1: அதிகாரப்பூர்வ PM கிசான் இணையதள பக்கத்தில் லாக் இன் செய்யவும்.
படி 2: லாக் இன் செய்தவுடன் பயனாளி நிலைப் பக்கம் என்ற பக்கம் காட்டும். அந்த பக்கத்திற்கு செல்லவும்.
படி 3: அங்கே உள்ள “பயனாளி நிலை” என்பதைக் கிளிக் செய்தால் அடுத்த பேஜ் திறக்கும்.
படி 4: நீங்கள் ஏற்கனவே இந்த திட்டத்தில் இருந்தால் உங்கள் கணக்கை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதை பயன்படுத்தி உங்கள் ஆதார் எண் அல்லது அக்கவுண்ட் எண் மூலம் உள்ளே செல்ல முடியும்.
படி 5: அந்த பக்கத்தில் “தரவு பெறவும்” என்பதை தேர்வு செய்து உங்கள் விவரங்களை பார்க்கலாம். நீங்கள் திட்டத்தில் இருக்கிறீர்களா என்பதை சோதனை செய்ய முடியும்.
படி 6: இதிலேயே உங்களுக்கு பணம் கொடுக்கப்பட்டு இருக்கிறதா இல்லையா என்பதை பார்த்து சோதனை செய்து கொள்ள முடியும்.
Read more ; டெங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு இதய நோய்கள் வரும் அபாயம் அதிகம்!. ஆய்வில் அதிர்ச்சி!